தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

19 Aug 2026, 9:33 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

காவிரி விவகாரம்: திமுக - தவெக வார்த்தை மோதல்

காவிரி விவகாரத்தில் திமுக துரோகம் செய்ததாக அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்ட, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அதை மறுத்தார். திமுக உறுப்பினர்கள் அநாகரிகமாக நடந்து கொள்வதாகக் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் சட்டப் பேரவையில் குற்றம் சாட்டிய நிலையில், முன்னாள் அமைச்சர் நேரு அதை மறுத்து வாதிட்டார். மேகதாது அணை விவகாரத்தில் அமைச்சர் என். ஆனந்த், “அவர்களால் ஒரே ஒரு கல் கூட அங்கு வைக்க முடியாது” எனக் கடுமையாகத் தெரிவித்தார்.

துரைமுருகன் குறித்த விவாதம்

முன்னாள் அமைச்சர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை என தவெக எம்.எல்.ஏ. சுதாகர் குற்றம் சாட்டிய நிலையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அதை மறுத்து, துரைமுருகன் தொடர்ந்து பத்து முறை வெற்றி பெற்றவர் என்றும், அவர் தான் அத்தொகுதியில் பல்கலைக்கழகம் முதல் சாலைகள், பாலங்கள் வரை அனைத்தையும் கட்டியவர் எனவும் பதிலளித்தார். எ.வ. வேலு, சட்டப்பேரவையில் இல்லாத உறுப்பினர்கள் குறித்து விமர்சிப்பது மரபல்ல எனச் சுட்டிக்காட்டினார்.

மேம்பாலம் இடிந்த விவகாரம்: முன்னாள் அமைச்சர் விளக்கம்!

சட்டப்பேரவையில், நிதி அமைச்சர் மரியவில்சன் புதனன்று பேசுகையில், திமுக ஆட்சியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ. 14 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலம் மூன்றே மாதத்தில் சேதமடைந்ததைச் சுட்டிக்காட்ட, முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, “54,600 கன அடி நீரை மட்டுமே தாங்கும் வகையில் கட்டப்பட்ட மேம்பாலத்தில் மூன்று லட்சம் கன அடி நீர் வந்ததால் அது சேதமடைந்தது; இது இயற்கையின் சீற்றம்” என பதிலளித்தார்.

கட்டுமானப் பொருட்கள் விலையைக் கட்டுப்படுத்த அரசுக்குக் கோரிக்கை!

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி, கட்டுமான பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் பிரபு, கடந்த ஆண்டு 13.22 கோடி மெட்ரிக் டன் ஜல்லி தயாரிக்கப்பட்டதாகவும், ஆனால் பயன்படுத்தப்பட்டது 85 கோடி மெட்ரிக் டன் என்றும் புள்ளிவிவரம் காட்டி, “மீதம் எங்கிருந்து வந்தது?” என எதிர்க்கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் என். ஆனந்த், திண்டுக்கல் தாண்டிக்குடி பஞ்சாயத்தில் முதலமைச்சர் விஜய் திரைப்படப் பிடிப்புக்காகச் சென்றபோது சாலை வசதி இன்மை குறித்து கிராம மக்கள் கேட்டதையும், ஆட்சிக்கு வந்த ஐந்தாம் நாளே அந்த பஞ்சாயத்துக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

நீர்வளம் குறித்து சவுமியா அன்புமணி உரை

பாமக எம்.எல்.ஏ சவுமியா அன்புமணி பேசுகையில், நீர் வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நெய்வேலி சுரங்கம், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள், கூவம் ஆறு உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டினார். மேட்டூர் உபரிநீர் திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம் - 2, தருமபுரி காவிரி உபரி நீர் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அமைச்சர் செங்கோட்டையன், குறும்பர் இன மக்களுக்கு எஸ்.டி சான்றிதழ் வழங்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

அதிமுக வெளிநடப்பு

சட்டப்பேரவை தலைவரிடம் தங்கள் கட்சி சார்பில் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச அனுமதி வேண்டி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு விளக்கம் அளித்த பேரவை தலைவர், அதிமுக கொடுத்த கடிதம் முதலமைச்சரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் நாளை (ஆக. 20) பதில் கிடைத்துவிடும் என்றும் அன்று விவாதத்தை அனுமதிப்பதாக தெரிவித்தார். இதை ஏற்க மறுத்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.