தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர்கள் படுகொலை தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் சட்டப்பேரவையில் கட்சிகள் காரசார விவாதம்!

17 Aug 2026, 9:31 pm
மாணவர்கள் படுகொலை தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் சட்டப்பேரவையில் கட்சிகள் காரசார விவாதம்!

மாணவர்கள் படுகொலை தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம்

சட்டப்பேரவையில் கட்சிகள் காரசார விவாதம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், கேள்வி நேரம் இல்லாததால் ஆகஸ்ட் 17 அன்று முக்கிய பிரச்சனைகளுக்கு குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கான சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அனுமதி அளித்தார்.

அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கோவையில் 19 வயது இளைஞன் அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் தாக்கிக் கொலை செய்ததாகவும், இது கோஷ்டி மோதல் அல்ல, படுகொலை என்றார். போதைக் கும்பல் குறித்து, அமுதன் வழங்கிய தகவலை காவல்துறையினர் குற்றவாளிகளிடமே கசியவிட்டது தான் அவரது மரணத்திற்குக் காரணம் என அவரது பெற்றோர் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிற கொலைகளின் பட்டியல்

திருவொற்றியூரில் போதைப் பழக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த தனுஷ் குமாரை 40 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ததையும், காஞ்சிபுரம், திருப்பூர், சென்னை அம்பத்தூர், வேலூர், கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் நடந்த தொடர் கொலைகளையும் உதயநிதி ஸ்டாலின் அவையில் பட்டியலிட்டார்.

அப்போது, தீர்மானத்தின் குறித்து மட்டுமே பேச வேண்டும் என சபாநாயகர் குறுக்கிட்டு எச்சரித்தார்.

போதைப்பொருள் தகவல் கொடுத்ததால் கொலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மாரிமுத்து பேசுகையில், மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஒரு தந்தையாக நின்று பார்ப்பதாக வேதனையுடன் தெரிவித்தார். இது தனிமனிதத் துயரம் மட்டுமல்ல, சமூகப் பொறுப்பு சார்ந்த பிரச்சனை எனும் நிலைப்பாட்டை அவர் முன்வைத்தார்.

போதைப்பொருள் விற்பனை கல்லூரி வளாகத்திற்கு வெளியிலும் அதிகமாக நடமாடுவதாகவும், இதில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரங்களைக் காவல்துறையிடம் அமுதன் தெரிவித்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் உண்மையிலேயே அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

காவல்துறை பொறுப்பேற்க வேண்டும்

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் மட்டுமே நடந்திருப்பதாகவும், இந்தச் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் கடுமையாகக் கூறினார். இது தீர்க்க முடியாத பிரச்சனை அல்ல எனவும், கடுமையான சட்டங்களை அமல்படுத்துவதற்கு நீதிமன்றத்திற்கும் காவல்துறைக்கும் தடையாக இருப்பது யார் என்பதைக் கண்டறிய வேண்டும் என்றார்.

இறுதியாக, மாணவர் சமூகத்திற்கு நீதியும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என அவர் அரசிடம் வலியுறுத்தி கோரிக்கை வைத்தார்.

மாணவர் படுகொலை சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல ; காவல்துறை சீர்திருத்தம் அவசியம்;

சட்டமன்றத்தில் சிபிஎம் வலியுறுத்தல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் ஆர். செல்ல சுவாமி, கோவையில் மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமது கட்சியின் சார்பாகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதாக கூறினார். இவ்விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், போதைப்பொருள் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.

மாணவனின் பின்னணி

தொடர்ந்து பேசிய அவர், கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவன் அமுதன், கும்பல் தாக்குதலால் கொலை செய்யப்பட்டது குறித்து விவரித்தார். மாணவர் அமுதனின் பெற்றோரைச் சந்தித்து கல்லூரி நிர்வாகம் ஆறுதல் சொல்ல கூட முன்வரவில்லை என்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். இதற்கு முன்பும் அந்தப் பகுதியில் மாணவர்களுக்கு இடையே பெரிதும் சிறிதுமாக இரண்டு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றிருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

போதைப்பொருள் புழக்கமே முக்கிய காரணம்

கல்லூரி வளாகத்திற்கு வெளியில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகமாக இருப்பதே இந்தத்தாக்குதல் சம்பவத்திற்கு அடிப்படைக் காரணம் என அவர் விளக்கினார். இந்தச்சம்பவத்தைச்சிறுமைப்படுத்துவது சரியல்ல எனவும், கொலை செய்யப்பட்ட மாணவருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும்அவர் கோரிக்கை விடுத்தார். கள்ளக்குறிச்சியிலிருந்து கல்வி கற்பதற்காக கோவைக்கு வந்த மாணவனுக்குஅடிப்படை மனிதாபிமானம் கூட காட்டாத கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கை மிகவும் வேதனையானது எனசாடினார்.

காவல்துறையில் சீர்திருத்தம் வேண்டும்

கடந்த 10 நாட்களில் மட்டும் கோவையில் மூன்று படுகொலைச் சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், இந்தஉண்மையை மறைத்து வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையாக மட்டும் பார்ப்பது பொருத்தமற்றது என்றும் குறிப்பிட்டார்.தமிழக வெற்றிக்கழக அரசு உண்மையிலேயே சட்டம் ஒழுங்கைச் சரிசெய்ய விரும்பினால், காவல்துறையில்அவசியம் களை எடுக்க வேண்டும் எனவும், காவல்துறை கறைபடியாத கரங்களால் நிர்வகிக்கப்பட வேண்டும்எனவும் கூறினார். இப்படிச் செய்தால் மட்டுமே தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கைச் சீர்படுத்தப்பட முடியும் என்றும்,இல்லையெனில் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் எச்சரித்தார்.

பத்மநாபபுரத்திலும் இதே போன்ற சம்பவம்

உதாரணமாக, தனது சொந்தத் தொகுதியான கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்திலும் இரு தினங்களுக்கு முன்பு இதே போன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெறாமல் இருக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரினார்.

அமுதன் படுகொலைக்கு பழிவாங்கும் நோக்கமே காரணம் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்கோவை மாணவர் கெ. அமுதன் படுகொலை குறித்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசினார்.அப்போது, ஆகஸ்ட் 10 அன்று, கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அமுதன் தொடர்ந்து தாக்கப்பட்டதாகவும், அன்று மதியம் மயக்க நிலையில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட போது ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்ததாகவும் விளக்கினார்.

இதுவரை 2 பேர் கைது; ரூ. 6 லட்சம் நிதியுதவி

செட்டியபாலம் காவல்நிலை யத்தில் அன்றே வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப் பட்டது. இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில்உள்ளதாகவும், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பழிவாங்கும் நோக்கமே இந்த மோதலுக்குக் காரணம் எனவும், போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக இவ்வழக்கில் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை எனவும் அவர் மறுத்துரைத்தார். பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தினருக்கு, வன்கொடு மைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ. 6 லட்சம் நிதியுதவி வழங்கப் பட்டுள்ளது.

மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிக்கை

வழக்கைத் தொடர்ந்து கண்கா ணித்து மூன்று மாதத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.