தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன்?
19 Jun 2026, 9:52 pm

தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன்?

பேரவையில் காரசார விவாதம்

சென்னை, ஜூன் 19 - தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, சட்டமன்றத்தில் ஒரு முறை மட்டுமே பாடப்பட வேண்டிய தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது குறித்து திமுக முன்னாள் அமைச்சர்கள் எ.வ. வேலு மற்றும் எஸ்.எஸ். சிவ சங்கர் ஆகியோர் கேள்வி எழுப்பி னர்.

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் என்பதே தமிழ்நாட்டின் நடைமுறை என்று சிவசங்கர் தெரிவித்தார். அப்போது, ஆளு நர் உரை பற்றி மட்டுமே விவா திக்க வேண்டும் என சபாநாயகர் கூறினார்.

2 முறை தேசிய கீதம் பாடியது குறித்து திமுக கொறடா எ.வ. வேலு விமர்சிக்கையில், “இன்று 2 முறை பாடச் சொல்பவர்கள் நாளை மூன்று முறை பாட சொல்வார்கள்” என்றார்.

இடைமறித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “இங்கு நான் தான் சபாநாயகர். எத்தனை முறை பாடல் போட வேண்டும் என்பதை நான் முடிவு செய்கிறேன்” என்று கூறினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளிக்கையில், “நமது அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் என்பதில் இந்த அரசு உறுதி யாக உள்ளது.

ஆளுநர் உரையின்போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பிறகு தான் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மாநில உரிமைகள் விஷயத்திலும் இந்த அரசு உறுதியாக ஒன்றிய அரசை எதிர்த்து நிற்கும். இத னால் உயிரே போகும் என்ற நிலை ஏற்பட்டாலும் அதற்கும் தயங்க மாட்டோம்” என்றார்.