தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயத் தொழிலாளர் திட்டங்களை ஒருங்கிணைத்து தனித்துறை உருவாக்குக! தமிழக அரசுக்குச் சங்கம் கோரிக்கை

21 May 2026, 9:35 pm
விவசாயத் தொழிலாளர் திட்டங்களை ஒருங்கிணைத்து தனித்துறை உருவாக்குக! தமிழக அரசுக்குச் சங்கம் கோரிக்கை
<p><strong>விவசாயத் தொழிலாளர் திட்டங்களை ஒருங்கிணைத்து தனித்துறை உருவாக்குக! தமிழக அரசுக்குச் சங்கம் கோரிக்கை</strong></p><p>திருச்சிராப்பள்ளி, மே 21- பல்வேறு அமைச்சகங்களின் கீழ் சிதறிக்கிடக்கும் விவசாயத் தொழிலாளர் நலத்திட்டங்களை ஒருங்கிணைத்துத் தனித்துறையை உருவாக்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. திருச்சி வெண்மணி இல்லத்தில் மாநிலத் தலைவர் மா. சின்னதுரை தலைமையில் நடைபெற்ற சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், புதிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், விளிம்பு நிலை மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்திப் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: • தனித்துறை மற்றும் நலவாரியம்: தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் எட்டில் ஒரு பங்காக உள்ள விவசாயத் தொழிலாளர்களின் சமூக நலன், ஓய்வூதியம், கூலி, நிலம் சார்ந்த திட்டங்கள் வெவ்வேறு அமைச்சகங்களின் கீழ் உள்ளதால் அவர்களைச் சென்றடைவதில்லை. எனவே, இவற்றை ஒருங்கிணைத்துத் தனித்துறை மற்றும் நலவாரியம் அமைக்க வேண்டும். • ரூ.1 லட்சம் நிபந்தனையற்ற கடன்: நுண்நிதி (Microfinance) நிறுவனங்களின் கடன் நெருக்கடியால் கிராமப்புறப் பெண்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதைத் தடுக்க, கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 1 லட்சம் வரை நிபந்தனையற்ற கடன் வழங்க நிதி ஒதுக்க வேண்டும். • ஊரக வேலைத்திட்டக் கோரிக்கை: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் சட்டக் கூலியைத் தடையின்றி முழுமையாக வழங்க வேண்டும். மேலும், பணித் தளங்களில் தொழிலாளர்களிடம் மேற்கொள்ளப்படும் கருவிழி (Iris) ஸ்கேன் முறையை உடனடியாக ரத்து செய்யவேண்டும். இக்கூட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ. லாசர், மாநிலப் பொதுச்செயலாளர் வீ. அமிர்தலிங்கம், பொருளாளர் அ. பழநிசாமி, செயலாளர் வீ. மாரியப்பன், திருச்சி மாவட்டத் தலைவர் ராஜேஷ் கண்ணா, செயலாளர் என். தங்கதுரை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.