தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2 ஆண்டுகளில் 9 ஆயிரம் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் பெ.விஸ்வநாதன் பேட்டி

23 Sept 2026, 11:06 pm
2 ஆண்டுகளில் 9 ஆயிரம் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் பெ.விஸ்வநாதன் பேட்டி

2 ஆண்டுகளில் 9 ஆயிரம் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் பெ.விஸ்வநாதன் பேட்டி

திருச்சி/தஞ்சாவூர், செப். 23 –தமிழகத்தில் காலியாக உள்ள 9 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முழுமையாக நிரப்பப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.இடைக்கால துணைவேந்தர் நியமனம்திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெ. விஸ்வநாதன்,பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களை நியமிக்கவும் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் சிண்டிகேட் குழுஅமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இக்குழுவின் பரிந்துரைப்படி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களில் மூத்த பேராசிரியர்கள் இடைக்காலத் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதே நடைமுறை மற்ற பல்கலைக்கழகங்களிலும் விரைவில்பின்பற்றப்படும் என்றும், எனினும் இது தொடர்பான நீதிமன்ற ஆணைக்காக அரசு காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

9 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி முகாமைத் தொடர்ந்துசெய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில்தற்போது 9 ஆயிரம் விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவித்தார். இப்பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், இவர்களில் முதற்கட்டமாக 2,708 பேர் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். அடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு,அடுத்த இரண்டு ஆண்டுகளில் தலா 3 ஆயிரம் பேர் வீதம் அனைத்துக் காலிப் பணியிடங்களும் வெளிப்படையானமுறையில் நிரப்பப்படும் என்றார்.

மேலும், கல்லூரிப் பேராசிரியர்களின் பணிமூப்பு பலன் கோரிய நீண்டகாலக்கோரிக்கையைநிறைவேற்றுவதாகத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளதாகவும், இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமாக உள்ளதாகவும், விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.