தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாடு 17ஆவது சட்டமன்றம் கூடியது முதல்வர் விஜய் உட்பட 233 பேர் எம்எல்ஏ-க்களாக பதவியேற்பு!

11 May 2026, 10:02 pm
தமிழ்நாடு 17ஆவது சட்டமன்றம் கூடியது முதல்வர் விஜய் உட்பட 233 பேர் எம்எல்ஏ-க்களாக பதவியேற்பு!

தமிழ்நாடு 17ஆவது சட்டமன்றம் கூடியது முதல்வர் விஜய் உட்பட 233 பேர் எம்எல்ஏ-க்களாக பதவியேற்பு!

சென்னை, மே 11 - தமிழ்நாடு 17-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டம், திங்கட்கிழமை (மே 11) அன்று காலை 9.30 மணிக்கு துவங்கியது.

இதில், சட்டமன்றத்திற்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முத லமைச்சர் சி. ஜோசப் விஜய் உட்பட தவெக, திமுக, அதிமுக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விசிக, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 233 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

அகர வரிசைப்படி உறுப்பி னர்கள் அழைக்கப்பட்டு, அவர்க ளுக்கு தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

‘பெரம்பூர் எம்எல்ஏ’

17-ஆவது சட்டப்பேரவையில் முதல் நபராக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ-வாக பதவிப் பிரமாணமும் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா (வில்லிவாக்கம்), அருண்ராஜ் (திருச்செங்கோடு), செங்கோட்டையன் (கோபிச் செட்டிபாளையம்), வெங்கட்ரம ணன் (மயிலாப்பூர்), நிர்மல்குமார் (திருப்பரங்குன்றம்), ராஜ்மோகன் (எழும்பூர்), பிரபு (காரைக்குடி) ஆகிய அமைச்சர்களும் எம்எல்ஏ-க்களாக பதவியேற்றனர்.

தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் தேர்வு சான்றிதழ்களை பேரவை செயலாளரிடம் வழங்கிய பின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பதவியேற்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

தவெக அமைச்சர்களைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர்கள் எடப் பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல் வம் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பதவியேற்றனர்.

பதவியேற்பு நிகழ்வு சுமார் 4 மணி நேரம் நீடித்தது.

இடதுசாரிகள் - விசிக எம்எல்ஏக்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஆர். செல்லசுவாமி, கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், டி. லதா நாகை மாவட்டம் கீழ்வேளூர் (தனி) தொகுதி சட்ட மன்ற உறுப்பினராகவும் பதவிப்பிர மாணமும், உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

அதேபோல், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி. ராமச்சந்திரன், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்ட மாரிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திண்டிவனம் (தனி) தொகு தியில் வெற்றிபெற்ற வன்னி அரசு, காட்டுமன்னார் கோவில் (தனி)தொகுதியில் வெற்றி பெற்ற இ. ஜோதிமணி ஆகியோ ரும் பதவிப்பிரமாணமும் உறு திமொழியும் எடுத்துக்கொண்டனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனியாக சபா நாயக அறையில் பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு 17ஆவது சட்டமன்றம் திங்களன்று கூடிய நிலையில் முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாகவும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.செல்லசுவாமி -பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், டி.லதா - கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.