திருச்சி விரைவு செய்திகள்
9 May 2026, 9:10 pm

தந்தையை இழந்த சோகத்திலும் சாதனை பள்ளியிலேயே 2ஆம் இடம் பிடித்த மாணவன்

சிவகங்கை, மே 9- சிவகங்கை நகரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் ஹர்ஷித் ராஜலிங்கம், தந்தையை இழந்த சோகத்திலும் பள்ளி அளவில் 2ஆம் இடம் பிடித்துள்ளார். பொதுத்தேர்வு எழுதி வீடு திரும்பிய நாளிலேயே அவ ரது தந்தை செந்தில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த துய ரத்தையும் தாண்டி தற்போது வெளியான பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவில் ஹர்ஷித் ராஜலிங்கம் 600க்கு 582 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். “மென்பொருள் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பதே என் தந்தையின் ஆசை. அந்த ஆசை யை நிறைவேற்ற நான் தொடர்ந்து முயற்சி செய்வேன்” என்று மாணவன் தெரிவித்துள்ளார். சோகத்தை சாதனையாக மாற்றிய ஹர்ஷித் ராஜ லிங்கத்தின் மனவலிமைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி 17 அரசுப்பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி

இராமநாதபுரம், மே 9- பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இராம நாதபுரம் மாவட்டத்தில் 6709 மாணவர்களும், 7323 மாணவி களும் என மொத்தம் 14,032 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளார்கள். மே 8 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவின்படி 6369 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 94.93 சத வீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7200 மாணவிகள் தேர்ச்சி பெற்று 98.32 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆக மொத்தம் மாவட்ட அளவில் 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 71 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 17 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. அரசு உதவிபெறும் 36 மேல்நிலைப் பள்ளிகளில் 7 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 54 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் 35 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள் ளன என்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது

இராமநாதபுரம், மே 9- இராமநாதபுரம் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை சம்பந்தமாக பேரிடர் நடவடிக்கைகளில் தனிநபர்கள் மற் றும் நிறுவனங்களின் பேரிடர் தடுப்பு, தணிப்பு, எதிர் நோக்கு நிலை, நிவாரணம், ஆராய்ச்சி, புதுமை மற்றும் திறன் வளர்த்தல் போன்ற வகைகளில் சிறப்பான பணிகள் ஆற்றியதை அங்கீகரிக்கும் வகையில் இந்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் “சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார்” என்ற வரு டாந்திர தேசிய விருது வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை இனங்க ளில் சிறப்புற செயலாற்றிய நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ramanathapuram.nic.in என்ற இணையத்தில் தங்கள் விண்ணப்பங்களை உரிய ஆதார ஆவணங்களுடன் பதிவு செய்யலாம். மேலும் இணையதள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யும் செயல்முறைகள் விபரத்தினை இணைய தளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். விருதிற்கு தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட இணையவழி சேவை யினை பயன்படுத்தி தங்கள் விண்ணப்பங்களை பதி வேற்றம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலை வர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளார்.

பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்

ஒட்டன்சத்திரம், மே 9- ஒட்டன்சத்திரத்தில் உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கான இலவச சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு நோய் கண்டுபிடிப்பு மற்றும் ஆலோ சனை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி செயற்குழு உறுப்பினர் ஹெரால்டு ஜாக்சன் தலைமை ஏற்று பேசினார். ஆயுட்கால உறுப்பினர் வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் அண்ணா சுமை தூக்கு வோர் சங்கத் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒட்டன்சத்திரம் வட்ட அரசு மருத்துவமனை முன்னாள் தலைமை மருத்துவர் டாக்டர் ஆசைத்தம்பி கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கி னார். இந்த முகாமில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்தத் தில் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை தி வாரியர் டிரஸ்ட் நிர்வாகி கள் செய்திருந்தனர்.

உடல்நல பாதிப்பால் பெண் தற்கொலை

திருவில்லிபுத்தூர், மே 9- திருவில்லிபுத்தூர் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோட்டைப்பட்டி பகுதியில், உடல்நல பாதிப்பால் மனமுடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோட்டைப்பட்டியைச் சேர்ந்த மல்லிகா (58), சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் வீட்டில் படுக்கையிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த போது, துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவில்லி புத்தூர் நகர காவல்துறையினர், மல்லிகாவின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கோட்டை நெடுஞ்சாலையில் பழமையான புளியமரம் சாய்ந்தது

திருவில்லிபுத்தூர், மே 9- மதுரையிலிருந்து செங் கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருவில்லி புத்தூர் அருகே நூறு ஆண்டு பழமை யான புளியமரம் வேருடன் சாய்ந்த தால், 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவில்லிபுத்தூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணி மனையை தாண்டி அவரம்பட்டி செல்லும் சாலையில், பெரிய அள வில் வளர்ந்திருந்த புளியமரத்தின் அடிப்பகுதி சேதமடைந்த நிலை யில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை மதி யம் அந்த மரம் திடீரென வேருடன் சாலையின் நடுப்பகுதியில் சாய்ந்தது. மரம் மிகப்பெரிய அளவில் கிளைகள் பரவி இருந்ததால், அது சாய்ந்தபோது சாலையோரத்தில் இருந்த இரண்டு மின்கம்பங்களும் சேதமடைந்தன. மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் அப்பகுதி யில் மின் விநியோகம் பாதிக்கப் பட்டது. மரம் சாய்ந்த நேரத்தில் பேருந்துகள் அல்லது வாகனங்கள் எதுவும் அருகில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அருகிலிருந்த கடை உரிமையா ளர்கள் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரி வித்ததையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நகர் காவல்துறை மற்றும் போக்கு வரத்து காவல்துறையினரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி னர். இதனால், மதுரை–இராஜ பாளையம் மற்றும் இராஜபாளை யம்–மதுரை வழித்தட பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப் பட்டன. தொடர்ந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மரக்கிளை கள் அகற்றப்பட்டு, மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த பணிகளில் திருவில்லி புத்தூர் தீயணைப்பு நிலைய அலு வலர் ராஜ்குமார், நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருக ராஜ், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடு பட்டனர். சாய்ந்த மரத்தை விரைவாக அகற்றி, போக்குவரத்தை சீர மைத்த அரசு துறை அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.

பிளஸ்2 பொதுத்தேர்வில் சாதித்த பள்ளிகள்

திருவில்லிபுத்தூர், மே 9- தமிழக அளவில் நடைபெற்ற பன்னி ரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திரா யிருப்பு பகுதிகளில் உள்ள பல பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியுடன் சாதனை படைத் துள்ளன. மகாராஜபுரம் ராஜராசைய்யா இந்து மக ளிர் மேல்நிலைப்பள்ளியில் 199 மாணவிகள் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்ற னர். சித்ராதேவி என்ற மாணவி 600க்கு 587 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். மேலும், கணக்குப்பதிவியல் – 5 மாணவி கள்; தாவரவியல் – 1 மாணவி; கணினி அறி வியல் – 1 மாணவி; கம்ப்யூட்டர் அப்ளி கேஷன் – 1 மாணவி; வரலாறு – 4 மாணவி கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 100 சதவீத தேர்ச்சிக்கு காரணமான ஆசி ரியர்கள் மற்றும் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளி நிர்வாகம் பாராட்டி யது. திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 263 மாணவிகள் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் – 3 மாணவி கள்; கணக்குப்பதிவியல் – 1 மாணவி; டைப்ரைட்டிங் – 1 மாணவி; வணிகவியல் – 1 மாணவி நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். மேலும், 33 மாணவிகள் 500க்கும் மேற் பட்ட மதிப்பெண்களும், 55 மாணவிகள் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட மதிப்பெண் களும் பெற்றுள்ளனர். பள்ளியின் முதல் மதிப்பெண் 583; இரண்டாவது மதிப்பெண் 582 ஆகும். மங்காபுரம் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 82 மாணவர் களும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் மாணவர் 600க்கு 523 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். வர லாறு பாடத்தில் ஒருவர் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளார். மாணவர்களையும், ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகம் மற்றும் ஊர் நிர்வா கஸ்தர்கள் பாராட்டினர். வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள ராமச்சந்திராபுரம் கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் 75 மாணவர்கள் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர். கனிஷ்கா – 600க்கு 550 மதிப்பெண்கள் (முதல் இடம்), விக்னேஸ்வரி – 600க்கு 545 மதிப்பெண்கள் (இரண்டாம் இடம்), ஐஸ்வர்யா – 600க்கு 526 மதிப்பெண்கள் (மூன்றாம் இடம்) பெற்றுள்ளனர். மேலும், 7 மாணவர்கள் 500க்கும் மேற்பட்ட மதிப் பெண்களும், 24 மாணவர்கள் 450 முதல் 499 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ள னர். 100 சதவீத தேர்ச்சிக்கு காரணமான ஆசி ரியர்கள் மற்றும் முன்னணி மதிப்பெண் பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜ் பாராட்டினார்.

வத்தலக்குண்டில் ரூ.6.34 கோடி மதிப்பில் அகலப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலை தரம் ஆய்வு

சின்னாளப்பட்டி, மே 9- வத்தலக்குண்டில் ரூ.6.34 கோடி மதிப் பில் அகலப்படுத்தப்பட்ட திண்டுக்கல் நெடுஞ்சாலையின் தரம் மற்றும் கட்டுமா னம் குறித்து மதுரை வட்ட நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த னர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக் குண்டில் வாகன போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, வத்தலக்குண்டு நகர் மதுரை சாலையிலிருந்து திண்டுக்கல் பைபாஸ் சாலை வரை உள்ள நெடுஞ்சாலையை விரிவுபடுத்த தமிழக அரசு சார்பில் ரூ.6.34 கோடி ஒதுக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் மற்றும் புதிய சாலை அமைப்பதற்கான கட்டுமான பணி கள் நடைபெற்று வந்தது. தற்போது சாலை பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் சனிக்கிழமை அதனை நெடுஞ்சாலைத்துறை மதுரை வட்ட திட்டங்கள் கண்காணிப்பு பொறியா ளர் ரமேஷ் தலைமையிலான நெடுஞ்சா லைத்துறையினர் வத்தலக்குண்டு நகர் முதல் என்எச்-45 தேனி சாலை வரை உள்ள அகலப்படுத்தபட்ட புதிய சாலையில் தரம், கட்டுமானம் குறித்து ஆய்வு செய்தனர். உடன் தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சங்கரசுப்பிரமணியம், உதவி கோட்ட பொறியாளர் சுப்பையா, வத்த லக்குண்டு உதவி கோட்ட பொறியாளர் ஆனந்த், ஆத்தூர் உதவி கோட்ட பொறியா ளர் அழகர்சாமி, உதவி கோட்ட பொறியா ளர் (தரக்கட்டுப்பாடு) சொக்கலிங்கம், உதவி பொறியாளர்கள் தாமரைமாறன், அருண்பிரபு, சதீஸ்குமார் மற்றும் நெடுஞ் சாலைத்துறை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகாசி அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் மீட்பு

சிவகாசி, மே 9- சிவகாசி அருகே உள்ள செவலூர் கிரா மத்தைச் சேர்ந்த முருகன் – முருகேஸ்வரி தம்பதியரின் மகன் பிரபாகரன் (23). லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், வீட்டிலிருந்து வெளியே சென்ற பிரபாகரன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தி னர் தேடியபோது, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிணற்றில் அவரது உடல் கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்.புதுப்பட்டி போலீசார், பிரபாகர னின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, செவலூர் கிராமத்தைச் சேர்ந்த 5 பேரி டம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசிக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது

காரியாபட்டி, மே 9- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே விடு தலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். காரியாபட்டி அருகே உள்ள குரண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுரு(52). விசிக முன்னாள் நிர்வாகி யாவார். கடந்த மே 7 அன்று கண்மாய் பகுதியில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதையடுத்து, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் விஜயகுருவின் உறவி னர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து ஆவியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்றது. இதில், குரண்டி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ்(53), அழகுராஜா(21), சீமைச்சாமி (20), கீழடி யைச் சேர்ந்த பழனிமுருகன் (20) ஆகியோரைக் கைது செய்தனர்.

விருதுநகர்: “திசை“ திட்டத்தின் மூலம் படிப்பைத் தொடர்ந்த 92 இடை நிற்றல் மாணவர்கள்

விருதுநகர், மே 9- விருதுநகர் மாவட்டத்தில் “திசை“ திட்டத்தின் மூலம் இடைநிற்றல் மாணவர்கள் 92 பேர் தங்களது படிப்பைத் தொடர்ந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பதே ‘திசை’ திட்டத் தின் பிரதான நோக்கமாகும். இத்திட்டத்திற்கு சமூகப் பொறுப்பு நிதி மற்றும் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம், இடைநிற்றல் செய்த 662 மாணவர்களு டன் அதிகாரிகள் நேரில் கலந்துரையாடினர். இதன் விளைவாக 78 மாணவர்கள் மீண்டும் பள்ளிகளிலும், 14 பேர் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் தங்களது படிப்பைத் தொடர்ந்துள்ளனர். இதில் ஜே.இ.இ தேர்வில் 11 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். நீட் தேர்வு எழுதிய 407 மாணவர்களின் கட்டணத்தை மாவட்ட நிர்வாகமே ஏற்றுக் கொண்டதோடு, அவர் களுக்குச் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டது. மேலும், 1,656 மாணவர்கள் பயிற்சித் திட்டங்களில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

குப்பைகளை அகற்றாத ரோசல்பட்டி ஊராட்சி சுகாதாரச் சீர்கேட்டில் முத்தால் நகர்

விருதுநகர், மே 9- விருதுநகர் அருகேயுள்ள ரோசல்பட்டி ஊராட்சி பகுதியில் குப்பை களை அள்ளும் பணி நடைபெற வில்லை. இதனால் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருகிறது. விருதுநகர் ஒன்றியத்திற்கு உட் பட்டது ரோசல்பட்டி ஊராட்சி. இங் குள்ள 20 ஆயிரம் குடியிருப்புகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக் கள் வசித்து வருகின்றனர். இந்நிலை யில், ஊராட்சி நிர்வாகம், நாள்தோறும் வீடு, வீடாகச் சென்று குப்பைகளை அள்ளும் பணியினைச் செய்வதில்லை. இதன் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் வேறு வழி யின்றி குப்பைளை பொது இடங்களில் கொட்டி வருகின்றனர். அதைக் கூட ஊராட்சி நிர்வாகத்தினர் தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றுவதில்லை. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா ளர் நாகேந்திரன் கூறுகையில், ரோசல்பட்டி ஊராட்சி முழுவதும் எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவி யல் குவியலாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக முத்தால் நகர் பகுதியில் உள்ள மின்மாற்றியின் முன்பு குப்பை கள் குவிந்து கிடக்கிறது. எதிர்பாராத விதமாக திடீரென குப்பைகளில் தீப்பற்றினால், மின்மாற்றியும் சேத மடைவதோடு, பெரும் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே, குப்பைகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக விருதுநகரில் தொடர் மழை பெய்து வருகிறது. மழைநீரில் குப்பைகள் நனைந்து விட்டதால், அதில் இருந்து துர்நாற்றம் அடிக்கத் துவங்கியுள்ளது. இதேநிலை நீடித்தால், கொசுக்கள் அதில் உருவாகி டெங்கு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான பல்வேறு நோய்கள் அங்கு பரவும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார். எனவே, ரோசல்பட்டி ஊராட்சி பகுதி யில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றிட மாவட்ட ஆட்சி யர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீரபாண்டி சித்திரை திருவிழா: போக்குவரத்து மாற்றம்

தேனி, மே 9- வீரபாண்டி சித்திரை திருவிழாவினை முன்னிட்டு வருகிற செவ்வாய்க்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட் டுள்ளதாக தேனி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் மருத்துவர் சினேகபிரியா அறி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு வருமாறு: தேனி மாவட்டத்தில் வரும் 12.5.2024 முதல் 19.5.2024 வரை நடைபெறவிருக்கும் கௌமாரியம்மன் கோவிலின் சித்திரை பெருந்திருவிழாவினை முன்னிட்டு தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலி ருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக 24 மணிநேரமும் அரசுப் பேருந்துகள் வீர பாண்டிக்கு இயக்கப்படும். 11.5.2024 இரவு 6 முதல் 19.5.2024 முடிய குமுளி, கம்பம் சின்னமனூர் - தேனி மார்க்கத்தில் வரும் அனைத்து வாக னங்களும் உப்பார்பட்டி பிரிவிலிருந்து தாடிச்சேரி, தப்புக்குண்டு, கொடுவிலார் பட்டி மற்றும் அரண்மனைப்புதூர் வழியாக தேனி வந்தடையும். மதுரை ,திண்டுக்கலிருந்து தேனி சின்னமனூர் மார்க்கத்தில் செல்லும் அனை த்து வாகனங்களும் உப்புக்கோட்டை விலக்கு, மார்க்கையன்கோட்டை விலக்கு, குச்சனூர், வழியாக மாற்றுப்பாதையில் சின்னமனூர் செல்லும்.