தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: ஈரோடு மாவட்டம் முதலிடம்!

9 May 2026, 1:54 am
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: ஈரோடு மாவட்டம் முதலிடம்!

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: ஈரோடு மாவட்டம் முதலிடம்!

ஈரோடு, மே 8- 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியான நிலையில், ஈரோடு மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து, சாதனை படைத்தது.

ஈரோடு மாவட்டத்தில் 221 பள்ளி மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர்.

10 ஆயிரத்து 497 மாணவர் கள், 11 ஆயிரத்து 981 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 476 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 10 ஆயிரத்து 331 மாணவர்களும், 11 894 மாணவிக ளும் ஆக மொத்தம் 22 ஆயிரத்து 225 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்க ளின் தேர்ச்சி விகிதம் 98.42 விழுக்காடு, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 99.27 விழுக்காடு ஆகும். 128 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியடைந்துள்ளன. இதில் 47 அரசுப்பள்ளிகள் முழு தேர்ச்சியை எட்டியுள்ளன. அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிம் 97.28 விழுக்காடு, மாணவிகளின் தேர்ச்சி விகி தம் 98.96 என மொத்த விகிதம் 98.24 விழுக்காடு ஆகும். மாநில அளவில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

தருமபுரி – 30 ஆம் இடம் தருமபுரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 175 பள்ளிகளிலிருந்து 8914 மாணவர்கள், 9600 மாணவிகள் என மொத்தம் 18,514 பேர் எழுதினர்.

இதில் 8143 மாணவர்கள், 9166 மாணவிகள் என மொத்தம் 17,309 மாணவர்கள் தேர்ச்சியடைந்த னர்.

இதில் 91.35 சதம் மாணவர்க ளும், 95.48 சதம் மாணவிகள் என மொத் தம் 93.49 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ள னர்.

மொத்தமுள்ள 175 பள்ளிகளில் 108 பள்ளிகள் அரசுப்பள்ளியாகும். இதில் 8 அரசுப்பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

அரசுப்பள்ளிகளி லிருந்து மொத்தம் 12,353 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 11,240 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தருமபுரி மாவட்டம் 93.49 சதவிகிதம் தேர்ச்சியடைந்து, மாநில தரவரிசையில் 30 ஆம் இடத்தை பிடித் துள்ளது.

கடந்தாண்டில் 95.35 சதவீதம் தேர்ச்சி பெற்று, 17 ஆம் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது

. நீலகிரி – 26 ஆம் இடம் நீலகிரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 87 பள்ளிகளை சேர்ந்த 2897 மாணவர்கள், 3402 மாணவி கள் என மொத்தம் 6,299 பேர் எழுதி னர். இதில் 2645 மாணவர்கள், 3284 மாணவியர்கள் என மொத்தம் 5,929 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். கடந் தாண்டை காட்டிலும் 0.16 சதவீதம் அதி கம் பெற்று, 94.13 தேர்ச்சி சதவிகிதத்து டன் நீலகிரி மாவட்டம் மாநில அளவில் 26 ஆவது இடத்தை பிடித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 37 அரசுப்பள்ளி களை சேர்ந்த 2237 பேர் தேர்வு எழுதிய தில், 2019 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 அரசுப்பள்ளிகள் 100 சதவிகித தேர்ச் சியை பெற்றுள்ளன.

சேலம் - 16 ஆம் இடம் சேலம் மாவட்டத்தில் 96.61% மாண வர்கள் தேர்ச்சி பெற்று மாநில தரவரி சையில் 16 ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை 36,572 மாணவர் கள் தேர்வு எழுதினர்.

இதில் 16,443 மாணவர்களும் 18,891 மாணவிகள் என 35,334 மாணவர்கள் தேர்ச்சி அடைந் துள்ளனர். மாணவர்களை விட மாணவி களை அதிகம் தேர்ச்சி அடைந்துள்ள னர்.

சேலம் மத்திய சிறைச்சாலையில் 21 சிறைவாசிகள் தேர்வு எழுதி 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.

இதில் சண் முக பிரபு 480 மதிப்பெண் பெற்று முத லிடத்திலும் தமிழரசன் 478 இரண்டா வது இடத்திலும் கலையரசன் 468 மூன் றாவது இடத்திலும் தேர்ச்சி பெற்றனர். நாமக்கல் - 10 ஆம் இடம் நாமக்கல் மாவட்டத்தில் மார்ச் 2026 இல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் 196 பள்ளி களை சார்ந்த 8,966 மாணவர்களும், 9,394 மாணவிகளும் என மொத்தம் 18,360 பேர் தேர்வு எழுதினர். இதில் 8,633 மாணவர்களும், 9,184 மாணவிக ளும் என மொத்தம் 17,817 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களின் தேர்ச்சி 96.29% தேர்ச்சி மாணவிகளின் தேர்ச்சி 97.76% என மொத்தம் 97.04% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 95 அர சுப்பள்ளிகளை சார்ந்த 4,395 மாண வர்களும், 5,131 மாணவிகளும் என மொத்தம் 9,526 பேர் தேர்வு எழுதினர்.இதில் 4,118 மாணவர்களும், 4,949 மாண விகளும் என மொத்தம் 9,087 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மாண வர்களின் தேர்ச்சி 93.70 % மற்றும் மாணவிகளின் தேர்ச்சி 96.84 % ஆக மொத்தம் 95.39 % தேர்ச்சி பெற்றுள்ள னர். இக்கல்வியாண்டில் (2025-2026) மொத்தம் 66 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

இதில் 12 அரசுப்பள்ளிகள் நூற்றுக்கு நூறு சத வீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

மேலும் நாமக்கல் மாவட்டம் கடந்த 2024-2025 ஆம் கல்வியாண்டில் மாநில அளவில் 15–ஆம் இடத்தை பெற்றிருந்த நிலை யில், இக்கல்வியாண்டில் (2025-2026) ஐந்து இடங்கள் முன்னேறி மாநில அள வில் 10ஆவது இடத்தைப் பெற்றுள் ளது குறிப்பிடத்தக்கது.

கோவை - 13 ஆம் இடம் கோவை மாவட்டம் ஒட்டுமொத்த மாக 96.66 சதவிகித தேர்ச்சியை பெற் றுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் தேர்வு எழுதிய 35,448 மாணவர்களில் 34,264 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.66 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 97.50 ஆகவும் உள்ளது.

இதன்படி மாணவர்களை விட மாண விகளே அதிக அளவில் தேர்ச்சி பெற் றுள்ளனர். பள்ளி வாரியான தேர்ச்சி விகி தத்தில் தனியார் பள்ளிகள் 99.03 சதவீத தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள் ளன. அதனைத் தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.41 சதவீதமும், அரசுப் பள்ளிகள் 93.39 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 91.31 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 158 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சியைப் பெற்று சாதனை படைத்துள்ளன.

கடந்த 5 வருடங்களாக 4 ஆம் இடத்தை பிடித்து வந்த கோவை, இந்த முறை 13 ஆம் இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது..

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.