12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணி தனியார்மயம் டெண்டர் ரத்து!
26 Jun 2026, 10:06 pm

12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணி தனியார்மயம் டெண்டர் ரத்து!

சென்னை, ஜூன் 26 - தாம்பரம், ஆவடி, ஓசூர், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக் குடி ஆகிய 12 மாநகராட்சி களில் பொது-தனியார் கூட்டாண்மை முறையில் திடக்கழிவு சேகரிப்பு பணி களை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் நோக்கில் கோரப்பட்டிருந்த டெண்டரை தமிழக அரசு திடீரென ரத்து செய்துள்ளது.

கடந்த ஜூன் 20 அன்று விரி வான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கவும் ஆலோசனை சேவைகள் வழங்கவும் தகுதி யான நிறுவனத்தைத் தேர்வு செய்யும் ஒப்பந்தப்புள்ளி விளம் பரமாக வெளியிடப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மை பணியாளர்கள் தொடர் போரா ட்டம் நடத்தினர். மேலும் தமிழக வெற்றிக் கழக அர சுக்கு ஆதரவு அளித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அர சியல் கட்சிகளும் தொழிற் சங்கங்களும் எதிர்ப்பு தெரி வித்தன. தவெக அமைச்சர வையில் பங்கேற்று இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யும் எதிர்ப்பு தெரிவித்தது.

இத்தகைய தொடர் எதிர்ப்புகளை அடுத்து, தூய்மைப்பணி தனியார் மயம் தொடர்பான டெண்டரை அரசு கைவிட்டுள்ளது.

அரசின் முடிவுக்கு சிபிஎம் வரவேற்பு; பணிநிரந்தரம் வழங்கவும் வலியுறுத்தல்

12 மாநகராட்சிகளில் தூய்மைப்பணி தனியார் மயம் தொடர்பான டெண்டரை ரத்து செய்யும் தமிழக அரசின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனியார்மயம் குறித்த டெண்டரை ரத்து செய்ததாக அரசு அறிவித்திருப்பதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், “தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாக தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்துவது தான் வழக்கமாக இருந்து வந்தது. இடையில் தான் தற்காலிகம், ஒப்பந்தம் என பணிப் பாதுகாப்பற்ற நிலையில் தொழிலாளர்கள் வைக்கப்பட்டு கடும் சுரண்டலுக்கும், பழிவாங்கலுக்கும் ஆளாக்கப்பட்டனர்” என்று சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. “எனவே, இந்த நிலைமைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வரும் காலங்களிலும் எந்தப் பகுதியிலும் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடக் கூடாது எனவும், தற்போது ஒப்பந்த பணிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.