தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

19 May 2026, 8:45 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை, மே 19 - தமிழ்நாடு மாநில பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 20) காலை 9:30 மணிக்கு வெளியாகின்றன. மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய அரசு இணைய தளங்கள் வழியாக முடிவு களை அறிந்து கொள்ள லாம். 78452 52525 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ் ஆப் எண் மூலமாகவும் முடி வுகளைத் தெரிந்துகொள்ள லாம். பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைப்பேசி எண் களுக்கு SMS வழியாகவும் முடிவுகள் அனுப்பப்படும்.

19 புதிய நீதிபதிகளுக்கு கொலீஜியம் பரிந்துரை

சென்னை, மே 19 - சென்னை உயர் நீதி மன்றத்தின் காலிப் பணியிடங் களை நிரப்ப 9 வழக்கறி ஞர்கள் மற்றும் 10 நீதித்து றை அதிகாரிகள் உட்பட மொத்தம் 19 பேரை புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்குப் பரிந்து ரை செய்துள்ளது. நீதித்துறை அதிகாரி களில் டாக்டர் பி. முருகன், எம்.டி. சுமதி உட்பட 9 பேரும், வழக்கறிஞர்களில் நடராஜன் ரமேஷ், ஜி.கே. முத்துக்குமார் உட்பட 10 பேரும் பரிந்துரைக்கப் பட்டுள்ளனர்.

லஞ்சம் பற்றி புகார் அளித்தால் ரூ. 1 லட்சம்!

சென்னை, மே 19 - எந்த அரசுத் துறையிலும் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டாலும் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம் என்றும், புகார் தரும் நப ருக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் தமி ழக அரசு அறிவித்துள்ளது. ‘1800 425 1555’ என்ற கட்டணமில்லாத் தொலை பேசி எண்ணில் இருபத்து நான்கு மணி நேரமும் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு பொறுப் பேற்ற அடுத்த மூன்று மாதங்களில் லஞ்சத்தை முழுமையாக ஒழிப்போம் என்று முதல்வர் விஜய் உறு திமொழி அளித்திருந்தார்.

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கைப்பேசி பயன்படுத்த தடை!

சென்னை, மே 19 - தமிழக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், பணியின் போது கைப்பேசி பயன்படுத்து வதையும், சட்டைப் பையில் கைப்பேசி வைத்திருப்பதை யும் முற்றிலுமாகத் தடை செய்து தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. பேருந்து நிலையங்களி லும் வழித்தடங்களிலும் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொள்வார்கள் என்றும், மீறுவோர் மீது எவ்விதப் பார பட்சமுமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.