10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.31% மாணவர்கள் தேர்ச்சி!
20 May 2026, 11:07 am

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.15 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.47 சதவீதமாகவும் உள்ளது.

பாடவாரியாக, தமிழில் 34 பேரும், ஆங்கிலத்தில் 92 பேரும், கணிதத்தில் 3,194 பேரும், அறிவியலில் 10,476 பேரும், சமூக அறிவியலில் 3,336 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.86 சதவீதமாக பதிவாகியுள்ளது. மேலும், தேர்வு எழுதிய 370 சிறைவாசிகளில் 354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஜூலை 8 முதல் 15 வரை நடைபெறும் என்றும், தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் மே 26 முதல் ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.