முந்தய பக்கம்

வேளாங்கண்ணியில் தமுஎகச மாநிலக் குழு கூட்டம்

24 Feb 2026, 3:55 pm
வேளாங்கண்ணியில் தமுஎகச மாநிலக் குழு கூட்டம்
<p><strong>வேளாங்கண்ணியில் தமுஎகச மாநிலக் குழு கூட்டம்</strong></p> <p>நாகப்பட்டினம், பிப். 24 - &nbsp;நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி யில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் &nbsp;பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் மாநிலத் &nbsp;தலைவர் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் தலை மையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் களப்பிரன் பேசும்பொருள் குறித்து விளக்கினார். பொரு ளாளர் சைதை ஜெ, மாநிலத் துணைத் தலை வர்கள் ஆதவன் தீட்சண்யா, நா.முத்துநில வன், ச.பிரளயன், துணைப் பொதுச் செயலா ளர்கள் கே.வேலாயுதம், லட்சுமிகாந்தன், வெண்புறா, அன்பரசன், அ.கரீம் உள்ளிட்ட &nbsp;மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் வி.பி.நாகைமாலி வாழ்த்துரை வழங்கி னார். &nbsp;வரும் சட்டமன்றத் தேர்தலில் மதச்சார் பற்ற கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து, மத வாத, சாதியவாத சக்திகளுக்கு நேரடியாக வும், மறைமுகமாகவும் துணைபுரியும் கட்சி களை தோற்கடிக்க வேண்டும். உறுப்பி னர்கள் சேர்க்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram