முந்தய பக்கம்

தமுஎகச இலக்கிய சந்திப்பு

6 Jul 2026, 1:08 am
தமுஎகச இலக்கிய சந்திப்பு
<p><strong>தமுஎகச இலக்கிய சந்திப்பு</strong></p><p>கோவை, ஜூலை 5- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க 273 ஆவது இலக்கியச் சந்திப்பு நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கோவை மாவட்டக்குழு சார்பில், 273 ஆவது இலக்கியச் சந்திப்பு ஞாயிறன்று கோவை தாமஸ் கிளப்பில் நடை பெற்றது. இல.கோபால் தலைமை வகித்தார். இந்நிகழ்வில், சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் புவியரசு மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, முகை தீன் அர்சத் எழுதிய “சுமை தாங்கிகள்” என்ற கட்டுரைத் தொகுப்பு குறித்து ரிஸ்வான் மொய்தீன் கருத்துரையாற்றி னார். முகைதீன் அர்சத் ஏற்புரையாற்றினார். பிம்பம் ஷாகுல் எழுதிய “உன்னதபுரத்துக் கதைகள்” கட்டுரைத் தொகுப்பு குறித்து எழுத்தாளர் கி. ராமதாஸ் கருத்துரையாற்றினார். பிம்பம் ஷாகுல் ஏற்புரையாற்றினார். தொடர்ந்து வாசிப்பனுப வம் பகுதியில் ஆன் ஃபிராங்க் எழுதிய “ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு” சுயசரிதை நூல் குறித்து மாணவி மதுக் ஷ்ரா கோனி தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இறுதி யாக, “ஹபீப் திரைப்படம்” குறித்து கவிஞர் ஜின் சிறப்புரை யாற்றினார். இதில், மாவட்ட துணைத்தலைவர் தி.மணி உட் பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கு.பாவேல் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram