தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாகப்பட்டினம், திருப்பூண்டியில் தமுஎகச கலை இலக்கிய இரவு

17 Aug 2026, 10:34 pm
நாகப்பட்டினம், திருப்பூண்டியில்  தமுஎகச கலை இலக்கிய இரவு

நாகப்பட்டினம், திருப்பூண்டியில் தமுஎகச கலை இலக்கிய இரவு

நாகப்பட்டினம், ஆக. 17- நாகப்பட்டினம் மாவட்டம் தமுஎகச கீழையூர் ஒன்றியக்கிளை சார்பில், ஆக. 15 சனிக்கிழமை, திருப்பூண்டி கடைத்தெருவில், “கலை இலக்கிய இரவு 2026” ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் பேராதரவுடன் நடைபெற்றது.

கிளைத் தலைவர் மு.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிளைச் செயலாளர் கி. கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார். கிளையின் சார்பில் நடத்தப்பட்ட கலைத்திறன் போட்டி

களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி. லதா, முன்னணி தலை

வர்கள் சுபாஷ் சந்திரபோஸ், ஒ.எஸ். இப்ராஹிம், மாவட்டத் தலைவர் ஆர். நடராஜன், மாவட்டச் செயலாளர் ஏவிஎம். பகத்சிங் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநிலத் துணைச் செயலாளர் மருதுபாரதி, நாகை மண்ணின் சிறப்புகளை எடுத்துரைத்து தொடக்கவுரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் ஆதவன் தீட்சண்யா சிறப்புரையாற்றினார். புதுகை பூபாளம் கலைக்குழு, பிரகதீஸ்வரன், செந்தில், கேசவன், கரகம் அம்பை பூபதி, சிறுவர்களின் கோலாட்டம், பறை இசை மற்றும் தப்பாட்டம், வெண்மணி மக்களிசைக் குழுவின் பாடல்கள், கவிஞர் ஆ.மீ. ஜவகரின் கவிதைகள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கலை இரவின் முக்கிய நிகழ்வாக, கிளையின் முன்னாள் தலைவர் ஆர்.ஏ.பி. ஆரோக்கியதாஸ் எழுதிய “கண்ணில் குத்திய முட்கள்” நூல், ஆதவன் தீட்சண்யாவால் வெளியிடப்பட்டு, பிரகதீஸ்வரனால் பெற்றுக்கொள்ளப்பட்டது.

நான்காம் வகுப்பு மாணவி விகாசினி பாடிய மக்களிசைப் பாடல், அனைவரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டைப்பெற்றது. கே.டி. முருகையன் நன்றியுரையாற்றினார். கிளைப் பொருளாளர் மூ. சுதாகர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.