முந்தய பக்கம்

திரிணாமுல் மேற்கு வங்க மாநிலத் தலைவரும் ராஜினாமா

4 Jul 2026, 8:38 pm
திரிணாமுல் மேற்கு வங்க மாநிலத் தலைவரும் ராஜினாமா
<p><strong>திரிணாமுல் மேற்கு வங்க மாநிலத் தலைவரும் ராஜினாமா</strong> </p><p>மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 15 ஆண்டுகாலம் தொடர்ச்சி யாக ஆட்சி செய்த கட்சியான திரிணா முல் காங்கிரஸ் பிளவு மற்றும் தீவிர குழப்பத்துடன் திண்டாடி வருகிறது. அதாவது திரிணாமுல் காங்கிரசின் ஊழல் ஆட்சியை சாதகமாக பயன் படுத்தி, மேற்கு வங்கத்தில் முதன் முறை யாக ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக தான் அக்கட்சியை சுக்குநூறாக உடைத் துள்ளது. குறிப்பாக மூன்றில் ஒரு பங்கு எம்எல்ஏக்கள் தனி அணியாகவும், எம்.பி.,க்கள் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி (என்சிபிஐ) என்ற அறியப்படாத கட்சியிலும் இணைந்துள்ளனர். சிலர் ராஜினாமா செய்து கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநிலத் தலைவரான சந்திராணி பட்டாச்சார்யா தனது பதவியை ராஜி னாமா செய்துள்ளார். இது மம்தா பானர்ஜி க்கு மற்றுமொரு பலத்த பின்னடைவா கவும், பெரும் அதிர்ச்சியாகவும் பார்க்கப் படுகிறது. ஏற்கெனவே பல்வேறு அரசி யல் சவால்களையும், நிர்வாக ரீதியிலான அழுத்தங்களையும் எதிர்கொண்டு வரும் மம்தா பானர்ஜிக்கு, கட்சியின் மிக முக்கியப் பொறுப்பில் உள்ள ஒரு மூத்த பெண் தலைவர் பதவியை ராஜி னாமா செய்துள்ளது திரிணாமுல் காங்கி ரஸ் கட்சியில் பெரும் தாக்கத்தை ஏற் படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram