தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎம் புகார் எதிரொலி திரிணாமுல் நிர்வாகியின் விவசாய நிலத்தில் ரூ. 2.24 கோடி பறிமுதல்

28 May 2026, 9:37 pm
சிபிஎம் புகார் எதிரொலி திரிணாமுல் நிர்வாகியின் விவசாய நிலத்தில்  ரூ. 2.24 கோடி பறிமுதல்

சிபிஎம் புகார் எதிரொலி திரிணாமுல் நிர்வாகியின் விவசாய நிலத்தில் ரூ. 2.24 கோடி பறிமுதல்

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் போது, மாநில அரசின்வீட்டுவசதி திட்டமான ‘பங்லார்பாரி’ கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கு கமிஷன் பெறப்பட்டது வடக்கு 24 பர்கானா மாவட்டம் பதுரி யாவில் உள்ளூர் மக்கள், குறிப் பாக வியாபாரிகளிடம் திரிணாமுல் குண்டர்கள் வீட்டுவசதி திட்டத்தின் பெயரில் மிரட்டிப் பணம் பறித்தனர்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்தது.இந்நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் வடக்கு 24 பர்கானா மாவட்ட காவல்துறை திங்க ளன்று திரிணாமுல் நிர்வாகி தீபங்கர் பட்டாச்சார்யா கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின்போது ரூ.80 லட்சம் ரொக்கத்தையும் காவல்துறை யினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து செவ்வாயன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பட்டாச்சார்யா, நீதிமன்றம் காவல் மூலம் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டார் புதனன்று மாலை காவல்துறையினர் அவருடைய விவசாய நிலத்திற்குஅழைத்துச் சென்றனர்.

அவர் சொன்ன இடத்தில் தோண்டியபோது, பணம் நிரப்பப்பட்ட நான்கு பைகள், ஒரு சாக்கு மூட்டையை காவல்துறை மீட்டது. அதில் 500 ரூபாய் தாள்களைக் கொண்ட அந்த பண குவியலை வங்கி அதி காரிகளின் முன்னிலையில் பல முறை எண்ணப்பட்டது.

இறுதியில், மீட்கப்பட்ட மொத்தத் தொகை ரூ. 2.24 கோடி என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தற்போது அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்தப் பணத்தின் மதிப்பு ரூ.3.04 கோடியாக (ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட ரூ.80 லட்சம் சேர்த்து) உயர்ந்துள்ளது” என்று அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பதுரியாவில் உள்ள உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகம் மற்றும் பட்டாச்சார்யா வுக்குச் சொந்தமான ஒரு தோட்டத்து வீட்டில் இருந்து சுமார் 4,000 அரசு தார்ப்பாய்களை காவல்துறை மீட்டி ருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.