டிஎம்பி வங்கி 104ஆவது நிறுவனர் தினவிழா
13 Nov 2025, 3:30 pm

டிஎம்பி வங்கி 104ஆவது நிறுவனர் தினவிழா ரூ.128.15 கோடி கடன் உதவிகள் வழங்கல்

தூத்துக்குடி, நவ.13- தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 104 ஆவது நிறுவனர் தினவிழா நடை பெற்றது. விழாவில் பல்வேறு பயனா ளிகளுக்கு ரூ.128.15 கோடி மதிப்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டது. தூத்துக்குடியை தலைமையிட மாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 104ஆவது நிறுவனர் தினவிழா ஏவிஎம் கமலா‌வேல் மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு வங்கி யின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சலீ எஸ். நாயர் தலைமை வகித்து, 200க்கும் மேற்பட்ட ஆன்லைன் சேவை களை வழங்கும் டிஜிட்டல் என்கே ஜ்மென்ட் ஹப் (DEH) போன்ற புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். விழாவில் வங்கியின் செயல் இயக்குநர் வின்சென்ட், முன்னாள் இயக்குநர் சி.எஸ். ராஜேந்திரன், தலைமை விருந்தினராக “இந்தி யாவின் நிலவு மனிதன்” என்று அழைக்கப்படும் இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் பத்மஸ்ரீ டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டனர். சுயேச்சை இயக்குநர் (பகுதி நேர தலைவர்), கே. ராமச்சந்திரன்,விழாவில் சிறப்பு விருந்தினர் மயில்சாமி அண்ணா துரை, வங்கியின் புதிய சேவைக ளைத் தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு 104ஆவது நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு களை வழங்கினார். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் வர விருக்கும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் திட்டத்தின் முக்கி யத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். தூத்துக்குடி மற்றும் மூன்று பிற பிராந்தியங்களில் பிரத்யேக கடன் மேளாவை நடத்தி, பல்வேறு பயனாளிகளுக்கு ரூ. 128.15 கோடி மதிப்பில் கடன் உதவிகள் வழங்கப் பட்டது. முன்னதாக பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிக ளும், நிறைவாக விஜய் டிவி புகழ் ஈரோடு மகேஷ் மற்றும் குழுவினரின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் நடை பெற்றது. விழாவில் இயக்குநர்கள் குழு, நிர்வாக இயக்குனர், நிர்வாக துணைத் தலைவர்கள், தலைமை நிதி அதிகாரி, நிறுவனர் இயக்குநர்க ளின் குடும்ப உறுப்பினர்கள், வணிக கூட்டாளர்கள், பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், ஊடக நண்பர்கள், பல்வேறு பிரமுகர்கள், பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.