வர்க்கப் போராட்டம்தான் மார்க்சியத்தை புரிய வைக்கும் தமுஎகச கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேச்சு
30 Jun 2026, 1:19 am
<p><strong>வர்க்கப் போராட்டம்தான் மார்க்சியத்தை புரிய வைக்கும் தமுஎகச கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேச்சு</strong></p><p>வர்க்கப் போராட்டம்தான் மார்க்சியத்தை புரிய வைக்கும் தமுஎகச கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேச்சு சென்னை, ஜூன் 29- வர்க்கப் போராட்டம் தான் மார்க்சியத்தை புரிய வைக்கும் என்று சிபிஎம் மூத்த தலைவர் டி.கே.ரங்க ராஜன் கூறினார். டி.கே.ரங்கராஜனின் சுயசரிதையான ‘தொடர் ஓட்டம் - வாழ்க்கை நிகழ்வு கள், நினைவுகள்’ நூல் அறிமுக கூட்டம் ஞாயி றன்று (ஜூன் 29) குரோம் பேட்டையில் நடைபெற்றது. தமுஎகச குரோம்பேட்டை கிளை இந்நிகழ்வை நடத்தி யது. நூலை அறிமுகம் செய்து பேரா.வெண்மணி, ஜான்வில்லியம், பிச்சை வள்ளிநாயகம், விஸ்வ நாதன், அம்பிகா ஆகியோர் பேசினர். இந்நிகழ்வில் தமது கடந்தகால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு பேசிய டி.கே.ரங்கராஜன், “கட்சி மீதான பிடிப்பு, தோழமை உணர்வு படிப்பதால் மட்டும் வராது, போராட்ட த்தால்தான் அது வரும். மார்க்சியத்தை புரிந்து கொள்ள வைப்பது வர்க்கப் போராட்டம்தான். வர்க்கப் போராட்டம் இல்லாமல் ஒரு காலகட்டம் சென்றால் அது நமக்கு ஆபத்தாக முடியும்” என்றார். “நவீன தாராளமயத்தால் ஒருபகுதி மக்கள் பலன் பெறுகிறார்கள். அதில் அவர்கள் எப்படி சுரண்டப் படுகிறார்கள் என்பதை உள்வாங்க வேண்டும். தக வல் தொழில் நுட்பத்துறை ஊழியர்கள், எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதை உணர்த்தாமல் அவர்களை அணிதிரட்ட முடியாது. எனவே, இந்த தொடர் ஓட்டம் தொடர வேண்டும் ” என்றார். “தமது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து ஒரு புத்தகம் எழுத வேண்டி உள்ளது” என்று குறிப்பிட்ட ரங்கராஜன், “புதிய தலை முறை கடந்த தலை முறையை விட மேம்பட்ட தாக உள்ளது. புதிய சூழலை மாணவர்கள் உருவாக்கு கிறார்கள். அடுத்த 10 ஆண்டுகளில் பழைய நிலைக்கு நாம் வந்துவிடு வோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார். நவீன வர்க்கப் போராட்டத்தை எவ்வாறு நடத்தவது, ஏகாதிபத்திய எதிர்ப்பதை எப்படி புரிந்து கொள்வது, விவசாயம் நவீன மயமாகி உள்ள நிலையில் சுரண்டல் தன்மை எவ்வாறு மாறியுள்ளது என்பதை புரிந்து, அதை மார்க்சிய பார்வையில் அதை அணுக வேண்டும்” என்றார். இந்நிகழ்விற்கு மு.சி.பலராமன் தலைமை தாங்கினர். சக்கரபாணி வர வேற்றார். இளங்கோ, சிவஞானம் பாடல்களை இசைத்தனர். மொழி பெயர்ப்பாளர் மயிலைபாலு வாழ்த்தி பேசினார். ஆனந்த் நன்றி கூறினார். நிகழ்வை கலியுகன் கோபி ஒருங்கிணைத்தார்.</p>
