சேலம் தெற்குத் தொகுதியில் டைட்டில் பார்க் திமுக வேட்பாளர் லோகநாதன் உறுதி
4 Apr 2026, 4:02 pm
<p><strong>சேலம் தெற்குத் தொகுதியில் டைட்டில் பார்க் திமுக வேட்பாளர் லோகநாதன் உறுதி</strong></p>
<p>சேலம், ஏப்.4- இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க சேலம் தெற்குத் தொகுதியில் புதிய டைட்டில் பார்க் அமைக்கப்படும் என திமுக வேட்பாளர் லோகநாதன் உறுதியளித்தார். சேலம் அம்மாபேட்டை பகுதியில் திமுக வேட்பாளர் லோகநாதன் சனியன்று பிரச் சாரத்தை துவக்கினார். அப் போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகை யில், சேலம் தெற்குத் தொகுதியில் இருக்கும் கன்னிமார் நதியை சுத்தப்படுத்தி அனை வரும் பயன்படுத்தும் வகையில் ஓடையின் இருபுறமும் அழகு படுத்தப்படும். இந்த தொகுதி முழுமையும் அதிக சாயப்பட்டறை கள் இருப்பதால் பிரச்சனையை களைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்த இப்பகுதியில் புதிய டைட்டில் பார்க் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக முதல்வர் அறிவித்த அனைத்து திட்டங்களையும் மக்களிடம் முழுமையாக கொண்டு செல்லும் வகையில் தனது பிரச் சாரம் இருக்கும், என்றார்.</p>
