ஆக்கிரமிப்பை அகற்றி பட்டா வழங்காத வருவாய்த் துறையை கண்டித்து போராட்டம்
16 Jun 2026, 11:13 pm
<p><strong>ஆக்கிரமிப்பை அகற்றி பட்டா வழங்காத வருவாய்த் துறையை கண்டித்து போராட்டம்</strong></p><p>திருவாரூர், ஜுன் 16- திருவாரூர் மாவட்டம் திருத்து றைப்பூண்டி வட்டம் விளக்குடி சிவன் கோவில் தெருவில் நீண்ட காலமாக அனுபவத்தில் இருந்த நாகராஜன் பரமசிவம் சர்வே எண் 107/14, 19குழி இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி பட்டா வழங்காமல் அலட்சியமாக செயல்படும் வருவாய்த்துறையைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்க்குடி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் நாக அறிவழகன் முன்னிலை வகித்தார். மக்கள் அதிகாரம் திருவாரூர் நாகை ஒருங்கிணைப்பாளர் த. சண்முகசுந்தரம், விடுதலை சிறுத்தை கட்சி மண்டல துணைச் செயலாளர் சி.மா. மகேந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.</p>
