அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
27 May 2026, 9:19 pm

அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திருவாரூர், மே 27 - தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதி யர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு பேரவை திருவாரூர் மாவட்டம் செல்வி பிளாட்டினம் அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தீ.ச.வி.மூர்த்தி தலைமை வகித்தார்.

கௌரவரத் தலைவர் மு.பரமேஸ்வரன் முன்னிலையில், மாவட்டத் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.

மாநில பொதுச் செயலாளர் பா.ரவி வேலை அறிக்கை வாசித்தார்.

மாநிலப் பொருளாளர் வை.நாகராஜன் நிதி நிலை அறிக்கை வைத்தார்.

கௌரவத் தலைவர் மு.பரமேஸ்வரன், நடவ டிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் இரா. சுப்ரமணியம் உரையாற்றினர்.

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.வசந்தன் வாழ்த்துரை வழங்கினார்.

மாநிலச் செயலாளர் எஸ்.புஷ்பநாதன், மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், தணிக் கையாளர் சி.தமிழ்மணி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

5 ஆம் மாநில பிரதிநிதித்துவப் பேர வையை 2026 செப்டம்பர் மாதம் தஞ்சா வூரில் நடத்துவது, புதிதாக பொறுப் பேற்றுள்ள அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர்கள் தொடர்பான தேர்தல் கால வாக்குறுதிகளை விரைந்து நிறை வேற்ற வேண்டும்.

குறிப்பாக, பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும்.

70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர் /குடும்ப ஓய்வூதி யர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

ஊராட்சி செயலாளர்கள், சத்து ணவு-அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், வனக்கா வலர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட் டோருக்கு தமிழக அரசின் குறைந்த பட்ச ஓய்வூதியமான ரூ.7850/- வழங்க வேண்டும்.

அரசு துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட நடவடிக்கை வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநிலச் செயலாளர் அ. கென்னடி பூபாலராயன் நன்றி கூறினார்.