தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு : தந்தையும் பலி

5 Oct 2026, 9:05 pm
மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு : தந்தையும் பலி
<p><strong>மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு : தந்தையும் பலி</strong></p><p>திருவாரூர், அக். 5- திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா (52). விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தார். இவரது மகன் ஆதித்யன் (24) டிப்ளோமா முடித்துவிட்டு தந்தைக்கு உதவியாக வேளாண் தொழில் செய்து வருகிறார். திங்கள்கிழமை புதூரில் உள்ள விவசாய நிலத்தில் உழவுப் பணியில் ராஜா ஈடுபட்டு வந்துள்ளார். ராஜா விதை தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவரது மகன் ஆதித்யன் டிராக்டர் கொண்டு நிலத்தை உழுதுள்ளார்.அப்போது திடீரென விவசாய நிலத்திற்கு மேலே சென்ற உயரழுத்த மின் கம்பி அறுந்து டிராக்டர் மீது விழுந்துள்ளது. இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><p>சிபிஎம் ஆறுதல்இச்சம்பவம் குறித்து அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. சுந்தரமூர்த்தி, கே.பி. ஜோதிபாசு, திருவாரூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். சுந்தரய்யா, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் என். இடும்பையன் உள்ளிட்டோர், திருவாரூர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு நேரில் சென்று, மின்சாரம் தாக்கி உயிர் இழந்த ராஜா, ஆதித்யன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரனை சந்தித்து, மின் கம்பி அறுந்து உயிரிழந்த குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தலா ஒருவருக்கு நிவாரணமாக ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர். மனு அளிக்கும்போது நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.