திருவாரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு காதல் திருமணம்!
15 May 2026, 5:17 pm

திருவாரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று சாதி மறுப்பு காதல் திருமணம் நடைபெற்றது.

நிசாந்தினி மற்றும் கவியரசன் ஆகிய இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்துவந்தனர். இந்நிலையில், சாதியைக் காரணம் காட்டிப் பெண் வீட்டார் இவர்களது திருமணத்திற்குச் சம்மதிக்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து இன்று, சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், சிஐடியு மாவட்டத் தலைவர் ஜோதிபாசு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.பாலா, மாவட்டத் தலைவர் பா.ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் இவர்களது திருமணம் நடத்திவைக்கப்பட்டது.