தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மறைவுக்கு முன்பே தீக்கதிர் சந்தா தொகையை மடித்து வைத்த தோழர் திருவாரூரில் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு!

12 Jul 2026, 9:09 pm
மறைவுக்கு முன்பே தீக்கதிர் சந்தா தொகையை மடித்து வைத்த தோழர் திருவாரூரில் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு!
<p><strong>மறைவுக்கு முன்பே தீக்கதிர் சந்தா தொகையை மடித்து வைத்த தோழர் திருவாரூரில் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு!</strong></p><p>திருவாரூர் வாழ்நாளின் இறுதி மூச்சு வரை தான் நேசித்த இயக்கத்தின் மீதும், அதன் கொள்கை முழக்கமான ‘தீக்கதிர்’ நாளி தழின் மீதும் ஒரு கம்யூனிஸ்ட் கொண்டி ருந்த தீராத அர்ப்பணிப்பு, திருவாரூர் மண்ணில் நெகிழ்ச்சியூட்டும் ஒரு வர லாற்றுப் பதிவாக மாறியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரான குடவாசல் அருகே உள்ள ஏருந்தவாடி பகுதியைச் சேர்ந்த டி. அய்யாறு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். தீக்கதிர் நாளிதழின் தீவிர வாச கரான அவர், தனது இறுதி நாட்களிலும் இயக்கப் பத்திரிகையின் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்துள்ளார். காலண்டர் காகிதத்தில் மடித்திருந்த கடமை உணர்வு மறைந்த தோழர் அய்யாறுவின் மகனும், சிபிஎம் குடவாசல் நகரக் குழு உறுப்பினருமான டி.ஏ. சரவணன் தனது தந்தையின் நினைவுகளைப் பகிர்ந்த போது அங்கிருந்த தோழர்களின் கண்கள் பனித்தன. தோழர் அய்யாறு தனது மறைவுக்குச் சில நாட்களுக்கு முன்பாகவே, இந்த ஆண்டுக்கான தீக்கதிர் நாளிதழின் ஆண்டு சந்தா தொகையை, ஒரு காலண்டர் காகிதத்தில் பத்திரமாக மடித்து எடுத்து வைத்துள்ளார். உடல் நலிவுற்ற நிலையிலும், கட்சி யின் பிரச்சார ஆயுதமான தீக்கதிருக்குச் செலுத்த வேண்டிய கடமையை அவர் மறக்கவில்லை என்பதன் சாட்சியாக அந்தக் காகித மடிப்பு விளங்கியது. தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தா கட்சியின் மீதும் தீக்கதிரின் மீதும் தந்தை கொண்டிருந்த அந்த உணர்ச்சிப் பூர்வமான அர்ப்பணிப்பை நெஞ்சில் ஏந்தி, அவர் மடித்து வைத்திருந்த அந்தச் சந்தா தொகையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் மற்றும் தீக்கதிர் மாவட்ட பொறுப்பாளர் கே.ஜி. ரகுராமன் ஆகியோரிடம் அவரது மகன் டி.ஏ. சரவணன் ஒப்படைத்தார். தங்கள் வாழ்நாளை இயக்கத்திற் காக அர்ப்பணித்த மூத்த தோழர்கள், தங்களின் இறுதிப் பயணத்திற்கு முன்பும் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திப்பார்கள் என்பதற்குத் தோழர் டி. அய்யாறுவின் இந்த நெகிழ்ச்சியான செயல் சான்றாகத் திகழ்கிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.