தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீதிமன்ற உத்தரவுப்படி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்கக் கோரிக்கை

19 Jun 2026, 1:00 am
நீதிமன்ற உத்தரவுப்படி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்கக் கோரிக்கை

நீதிமன்ற உத்தரவுப்படி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்கக் கோரிக்கை

திருவண்ணாமலை, ஜூன் 18- திருவண்ணாமலை மாவட்டம் வந்த வாசியில் இயங்கி வந்த ‘வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ்’ தொழிற்சாலையில் பணி யாற்றிய தொழிலாளர்களுக்கு, நீதிமன்ற உத்தரவுப்படி நிலுவைத் தொகையை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. வந்தவாசி வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்த 293 தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி ஊதியம் வழங்கப்பட வேண்டும் என கடந்த 2004-ஆம் ஆண்டு தொழிலாளர் ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த ஆணையம், அந்தத் தொழிலாளர்களுக்கு 32 லட்சத்து 82 ஆயிரத்து 466 ரூபாயை 18 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவு

தொழிலாளர் ஆணையத்தின் இந்த உத்தரவு நீண்டகாலமாக அமல்படுத்தப் படாத நிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 12 வார காலத்திற்குள் தொழிலாளர்களுக்குரிய தீர்வினை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு

இந்த நீதிமன்ற உத்தரவினைச் செயல்படுத்தக் கோரி, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டாட்சியர் அலுவல கத்தில் வியாழக்கிழமை (ஜூன் 18) நடை பெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

நூற்றுக் கணக்கான தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, நீதிமன்ற உத்தரவின்படி ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என்று அம்மனுவில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் போது சிஐடியு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. நாகராஜன், நிர்வாகி இரா. பாரி மற்றும் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் தொழிற்சங்கத் தலைவர் ஆர். வேலாயுதம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.