பொதுப் பாதையை மீட்டு தரக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
17 Jun 2026, 12:12 am
<p><strong>பொதுப் பாதையை மீட்டு தரக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு</strong></p><p>திருவண்ணாமலை, ஜூன் 16- திருவண்ணாமலை அடுத்த கண்டியாங்குப்பம் கிராமத்தில், அம்பேத்கர் காலனி மக்கள் பல ஆண்டு களாகப் பயன்படுத்தி வரும் பொதுப் பாதையை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர். கடந்த 15 ஆண்டு களுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் தங்களின் போக்கு வரத்திற்காகப் பயன்படுத்தி வரும் பொதுப் பாதையை, சிலர் ஆக்கிரமித்துமனைப் பிரிவு களாக மாற்றி விற்பனை செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கிராம மக்களின் பொதுப் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி யுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட நபர்களின் ஆக்கிரமிப்பு முயற்சியைத் தடுத்து, கிராம மக்களின் பயன் பாட்டிற்கான பொதுப் பாதையை மீட்டுத் தர வேண்டும் என்று ஆட்சியரி டம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.</p>
