முந்தய பக்கம்

மயானப் பாதை இல்லாததால் வயல்வெளி வழியாக உடலைஎடுத்துச் செல்லும் அவலம்

yesterday
மயானப் பாதை இல்லாததால் வயல்வெளி வழியாக உடலைஎடுத்துச் செல்லும் அவலம்
<p><strong>மயானப் பாதை இல்லாததால் வயல்வெளி வழியாக உடலைஎடுத்துச் செல்லும் அவலம்</strong></p><p>திருவண்ணாமலை, நவ 18-வந்தவாசி அருகே மயானப் பாதை இல்லாததால் இறந்தவர்களின் உடலை வயல்வெளி வழியாக எடுத்துச் செல்லும் அவல நிலை உள்ளது.</p><p>திருவண்ணாமலை மாவட்டம் வந்த வாசியை அடுத்த கீழ்நமண்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பகுதிக்கான மயானம் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனால், மயானத்துக்கு செல்ல பாதை வசதி எதுவும் இல்லை. இதனால் இவர்கள் பகுதியில் இறப்பு நிகழும்போது, ஒரு கி.மீ. தொலைவுக்கு வயல்வெளி வழியாக உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும் அவல நிலையில் உள்ளனர். எனவே உடனடியாக மயானப் பாதை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram