மதுபானக் கடையை அகற்றக்கோரி தேசியக் கொடியுடன் போராட்டம்
20 May 2026, 1:31 am
<p><strong>மதுபானக் கடையை அகற்றக்கோரி தேசியக் கொடியுடன் போராட்டம் </strong></p><p>திருவண்ணாமலை, மே 19- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் உள்ள மண்ட கொளத்தூர் கிராமத்தில் பொது மக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடை யூறாக உள்ள மதுபான கடையை அகற்றக் கோரி பள்ளி மாணவர்கள் தேசியக்கொடியுடன் திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சேத்துப்பட்டு - போளூர் சாலையில் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மண்டகொளத்தூர் கிரா மத்தில் அரசு மதுபான கடை நீண்ட காலமாக இயங்கி வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோயில், அரசு மேல் நிலைப்பள்ளி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, பேருந்து நிலையம் அருகே உள்ள இந்த மதுபான கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வரு கின்றனர். மண்ட கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி யில் மட்டப் பிறையூர், வம்பலூர், கரிகாத்தூர், மாணிக்க வள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து மாணவ, மாணவி கள் இங்கே படித்து வருகின்றனர். இவர்கள் போளூர் சாலையில் இருந்து மண்ட கொளத்தூருக்கு 2 கிலோமீட்டர் தூரம் நடந்தும், சைக்கிளிலும் செல்கின்றனர். இவ்வழியே அரசு மது பான கடை இருப்பதால் மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அந்த மதுபான கடையை அகற்ற வேண்டும் என போராட்டம் நடத்திய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
