முந்தய பக்கம்

போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பேருந்து வசதி

11 Oct 2026, 1:26 am
போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பேருந்து வசதி

போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பேருந்து வசதி

திருவண்ணாமலை, அக்.10-திருவண்ணாமலை மாவட்டம் கோழிப்புலியூர் கூட்ரோட்டிலிருந்து பெரண மல்லூர் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், பள்ளி நேரத்தில் போது மான பேருந்து வசதி இல்லாததால் சிரமப்பட்டு வந்தனர்.

பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை மீனாட்சி, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பேரவை மன்றத் தலைவி வேணி ஏழுமலை, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி வளர்மதி, சமூக ஆர்வ

லரும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினருமான இரர. இராஜசேகரன் ஆகியோர் செய்யாறு பணிமனை கிளை மேலாளர், மாவட்ட

ஆட்சியர், போக்குவரத்துத் துறை அமைச்சர், முதல மைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பினர். இரண்டு மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படாததைத் தொடர்ந்து, இராஜசேகரன் தலைமையில் பெற்றோர்

கள் சாலை மறியல் போராட் டம் நடத்த அறிவித்தனர். இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டு, ஒப்பு தல் அளிக்கப்பட்டதன் பேரில் வெள்ளிக்கிழமை (அக்.9) முதல் மாணவ-மாணவிகளுக்காகத் தனியாக அரசு பேருந்து இயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram