பழைய பேருந்து நிலையத்தைத் தொடர்ந்து இயக்க வேண்டும் திருவண்ணாமலை ஆட்சியரிடம் சிபிஎம் கோரிக்கை
10 Jul 2026, 9:49 pm
<p><strong>பழைய பேருந்து நிலையத்தைத் தொடர்ந்து இயக்க வேண்டும் திருவண்ணாமலை ஆட்சியரிடம் சிபிஎம் கோரிக்கை </strong></p><p>திருவண்ணாமலை,ஜூலை 10- திருவண்ணாமலை பழைய பேருந்து நிலை யத்தைத் தொடர்ந்து செயல்பாட்டில் வைத்தி ருக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது: “திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் ரயில் நிலையத்திற்கு அருகில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, தற்போது சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் மார்க்கம் செல்லும் பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படுகின்றன. வேலூர், சேலம், பெங்க ளூர், காஞ்சிபுரம், செங்கம் மார்க்கம் செல்லும் பேருந்து கள் பழைய பேருந்து நிலை யத்திலிருந்து இயக்கப்படுகின்றன. தற்போதுள்ள பழைய பேருந்து நிலையத்தை முழுமையாக மூடிவிட்டு, புதிய பேருந்து நிலையத்தி லிருந்து மட்டுமே அனைத்துப் பேருந்துகளை யும் இயக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிப்பதாகத் தெரிகிறது. அவ்வாறு பேருந்து நிலையத்தைக் காலி செய்து வேறு நோக்கத்திற்காகப் பயன் படுத்தினால், அங்கிருக்கும் நிரந்தர மற்றும் தற்காலிகக் கடைகளை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் 350க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை இயக்கும் ஓட்டுநர்களின் வாழ்வாதா ரம் கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும், தற்போதைய நிலையில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சில பேருந்துகள் இயக்கப்படு வதால், நகரின் போக்கு வரத்து நெரிசல் கட்டுக்குள் உள்ளது. புதிய பேருந்து நிலையம் சரியாகத் திட்ட மிடப்படாமல் கட்டப் பட்டுள்ளதால், அங்குப் பேருந்துகளைக் கையாள்வதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கின்றன. எனவே, பழைய பேருந்து நிலையத்தை மாநகர பேருந்து நிலையமாகத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று அம்மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.</p>
