தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

லத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கஊராட்சி வளர்ச்சி இயக்கம் கோரிக்கை

29 Oct 2026, 11:41 pm
லத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கஊராட்சி வளர்ச்சி இயக்கம் கோரிக்கை

லத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கஊராட்சி வளர்ச்சி இயக்கம் கோரிக்கை

திருவண்ணாமலை, அக் 29-திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை பாது காக்க நந்தன் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என ஊராட்சி வளர்ச்சி இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திரு வண்ணாமலை மாவட்டத்தின் நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தவும் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை நிறைவு செய்யவும் சுமார் 70 ஆண்டுகளாக விவ சாயிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்த நந்தன் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது அவசியமாகும்.

எனவே, திட்டத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்து பணிகளை தொடங்குவதில் உள்ள நிர்வாக மற்றும் தொழில்நுட்ப தடைகளை விரைந்து தீர்க்க வேண்டும். நீர்வளத்துறை, வருவாய்த்துறை, நில அளவைத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளில் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். கால்வாய் வழித்தடம் நில அளவை மற்றும் நிலம் தொடர்பான தேவைகள் குறித்து சம்பந்தப்பட்ட விவசாயிகள் நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த திட்டத்திற்காக விவசாயிகளிடம் கையகப்படுத்தும் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.