திருவண்ணாமலையில் ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
17 hours before

திருவண்ணாமலையில் ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் பக்தர்களுக்காக அவசர உதவி 108 ஆம்புலன்ஸ் மற்றும் பைக் ஆம்புலன்ஸ் சேவையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் திங்கள் அன்று (நவ.23) கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அரசு செயலர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் மற்றும் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளின் இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் திங்கள் கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.