அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் நிதி! கல்வி உரிமையை மீட்டெடுப்போம்!
yesterday

அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் நிதி! கல்வி உரிமையை மீட்டெடுப்போம்!

தமிழகத்தில் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டமாகத் திருவண்ணாமலை விளங்கு கிறது. ஆனால் தொழில்வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் அரசின் கவனம் போதுமானதாக இல்லை. திருவண்ணாமலையைமையப்படுத்தி அண்ணாமலை யார் கோயில் மட்டுமே உள்ளது; செய்யார் சிப்காட்தவிர பெரும் தொழிற்சாலை கள் ஏதுமில்லை. விவ சாயம், விவசாயக்கூலிமற்றும் கட்டுமானத் தொழிலாளர்களே இங்கு அதிகம்.ஆண்டு முழுதும் விவசாய வேலை கள் கிடைப்பதில்லை. வி.ஜி.பி., ராம்ஜி திட்டத்தின் வேலை நாட்கள் 125 என்றாலும், ஒன்றிய அரசின் சட்டத் திருத்தக் குளறுபடிகளால் இந்தாண்டு 45 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்துள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் திருப்பூர், பெங்களூர், சென்னைக்குப் பிழைப்பு தேடிச் செல்வதால், பிள்ளைகள் பாட்டி அல்லது உறவினர்களின் அரவணைப்பில் கல்வி கற்கும் நிலையே உள்ளது.

இவ்வாறான மக்களின் சமூக, பொருளாதார மாற்றத்திற்குக் கல்வியே பிரதானத் தேவை. ஆனால், சில குடும்பங்களில் மட்டுமே முதல் பட்ட தாரிகள் உருவாகின்றனர்; பலருக்கு அடிப்படை கல்வியே எட்டாக்கனியாக உள்ளது. மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும், வாழ்க்கை நடத்தவே சிரமப்படும் ஏழை மக்களால் காசு கொடுத்துப் படிக்க இயலாது. "கேடில் விழுச்செல்வம் கல்வி..." என்ற வள்ளுவன் வாக்கைப் புறந்தள்ளும் விதமாக, ஓராசிரியர் பள்ளிகளை மூடுவதும், தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இளைஞர்களைக் குலத்தொழில் செய்யத் தூண்டுவதும் அடிப்படை கல்வி உரிமையைக் கானல் நீராக்குகின்றன.

மாவட்டத்தில் 2,000-க்கும் அதிகமான பள்ளிகளில் சுமார் 4.5 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். ஆண்டுதோறும் 12-ஆம் வகுப்புத் தேர்வை 27,000 பேரும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 30,000-க்கும் மேற்பட்டோரும் எழுதியும், தேர்ச்சி விகிதம் மாநிலச் சராசரியை விடக் குறைவாகவே உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 42 பள்ளிகளில் நடத்திய கள ஆய்வில், 76 ஆசிரி யர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 9 பள்ளிகளில் ஆய்வ கம் இல்லை, 16 பள்ளிக ளில் சுற்றுச்சுவர் இல்லை,கட்டிடங்கள் பழுத டைந்துள்ளன. குடிநீர், தூய்மைப் பணியாளர்கள், இரவு காவலர்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2,182 கோடி கல்வி நிதியை ஒன்றிய பா.ஜ.க. அரசு வழங்க மறுக்கிறது.

அதேபோல், நிதியுதவிப் பள்ளிகளின் சிதிலமடைந்த கட்டிடங்களுக்கு அரசு நிதி ஒதுக்காததால், அவை வேறு நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட அரசுக் கட்டிடங்களில் இயங்குகின்றன. உதாரணமாக, பெரணமல்லூர் ஒன்றியம் அரியபாடி நிதியுதவி தொடக்கப் பள்ளி கட்டிடம் சிதிலமடைந்ததால், சில ஆண்டுகளாகக் கிராம ஊராட்சி சேவை மையத்தில் மாணவர்கள் சிரமத்துடன் பயில்கின்றனர். எனவே, நிதியுதவிப் பள்ளிகளை அரசுப் பள்ளிகளாக அறிவித்து, புதிய கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்க வேண்டும்.

மேலும், அரசு நடுநிலைப் பள்ளி களுக்குக் கடந்தாண்டு தி.மு.க. ஆட்சி யில் வழங்கப்பட்ட 'ஸ்மார்ட் கிளாஸ்' பொருட்கள் டெண்டர் விடப்படாததால் ஓராண்டிற்கு மேலாகப் பயன்பாடின்றி வீணாகின்றன. அவற்றை உடனடியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.

கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், மாணவர் தலைவர் தேர்தல் நடத்துதல், போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் சாதிய அடையாளங்களைக் களைவதற்கான பயிற்சிகள் அளித்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி,செவ்வாயன்று (நவ.17) திருவண்ணா மலையில் சி.பி.எம். சார்பில் நடைபெறும் போராட்டத்தில் மக்கள் அனைவரும் கரம் கோர்த்து வர வேண்டுமென அன்புடன் அழைக்கிறோம்.