அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதி கோரிக்கை திருவண்ணாமலை மக்கள் வலியுறுத்தல்
yesterday
<p><strong>அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதி கோரிக்கை திருவண்ணாமலை மக்கள் வலியுறுத்தல்</strong></p><p>திருவண்ணாமலை,ஜூன் 21- திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையத்தில் கூடுதல் படுக்கை வசதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மருத்துவமனைக்கு நாள் தோறும் 4,000 புறநோயாளி களும், 1,500 உள்நோயாளி களும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்து சிகிச்சை பெறு கின்றனர். இங்கு மாதத் திற்கு 1,800 பிரசவங்கள் வரை நடைபெறும் சூழலில், போதிய படுக்கைகள் இல்லாததால் கர்ப்பிணி கள் தரையில் தங்கவைக்கப் படுவதாகவும், படுக்கை ஒதுக்கப் பணியாளர்கள் பணம் கேட்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள் ளன. சமீபத்தில் பொதுப்பணி த்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மருத்துவமனை யில் ஆய்வு மேற்கொண்ட போது, பொதுமக்கள் இக் குறைகளை அவரிடம் நேரடி யாக எடுத்துரைத்து முறையிட்டனர். எனவே, கர்ப்பிணிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வா கம் இங்கு கூடுதல் படுக்கை கள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனப் பொது மக்கள் வலியுறுத்தியுள் ளனர்.</p>
