முந்தய பக்கம்

திருவண்ணாமலையில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

3 hours before
திருவண்ணாமலையில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரியத்தில் கேன்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பதவி வழங்க வலியுறுத்தி, திருவண்ணாமலை மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு பெருந்திறள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் கே. காங்கேயன், மாநில செயலாளர் பி. ஜீவா, முன்னாள் மாநில செயலாளர் ஆர். சிவராஜ், தர்மபுரி திட்ட செயலாளர் லெனின் மகேந்திரன், கள்ளக்குறிச்சி திட்ட செயலாளர் எம். சிவக்குமார், சிஐடியு ஒருங்கிணைப்பாளர் கே. நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram