தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருவண்ணாமலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

17 May 2026, 11:56 pm
திருவண்ணாமலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
<p><strong>திருவண்ணாமலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்</strong></p><p>செங்கம்,மே 17- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் தண்டராம்பட்டு பகுதிகளில் குடி தண்ணீர் வேண்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டராம்பட்டு அடுத்த ராயண்டாபுரம் கிராம ஊராட்சியில் குடிநீர் வழங்கும் மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதன் காரண மாக கடந்த இருபது நாட்களுக்கு மேலாக அந்தப் பகுதிக்குக் குடிதண்ணீர் வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஞாயிறன்று (மே 17) ராயண்டாபுரம் கிராமத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், செங்கம் நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு பகுதியில் விநி யோகிக்கப்படும் குடிநீரில் பாசிகள் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி னர். மாசடைந்த குடிநீர் வழங்கப்படுவதைக் கண்டித்து, அவர்கள் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் போராட் டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் இந்த அடுத்தடுத்த போராட்டங்களால் திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் ஒரு மணி நேரத்திற் கும் மேலாகப் போக்குவரத்து கடுமை யாகப் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் அணி வகுத்து நின்றன. இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை யினர், பொதுமக்களிடம் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். அதன் பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.