தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருவண்ணாமலை மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள்: ஒரு பார்வை

31 Mar 2026, 4:50 pm
திருவண்ணாமலை மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள்: ஒரு பார்வை
<p><strong>திருவண்ணாமலை மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள்: ஒரு பார்வை</strong></p> <p>திருவண்ணாமலை,மார்ச் 31- சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணா மலை மாவட்டத்தில் களம் காணும் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கனியை பறிக்கவுள்ளனர். திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு 4-வது முறையாகப் போட்டியிடு கிறார். 6 முறை சட்டமன்ற உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராக வும், மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கீழ்பென்னாத்தூர் தொகுதியில் சட்டப் பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி 4-வது முறையாகப் போட்டியிடுகிறார். 5 முறை எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்ற இவர், 1989 முதல் பல்வேறு மக்கள் பணிகளை ஆற்றி வருகிறார். கலசபாக்கம் தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன் 2-வது முறையாக திமுக சார்பில் களம் காண்கிறார். இவர் ஊராட்சி மன்றத் தலைவர் முதல் ஒன்றியச் செயலாளர் வரை பல்வேறு பதவிகளை வகித்தவர். செங்கம் தொகுதியில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த மு.பெ. கிரி, தற்போது 3-வது முறையாக திமுக சார்பில் போட்டியிடுகிறார். வந்தவாசி (தனி) தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த எஸ். அம்பேத்குமார் 3-வது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆரணி தொகுதியில் கண்ணமங்கலம் பேரூராட்சித் தலைவராக உள்ள மகாலட்சுமி கோவர்த்தனன் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். செய்யாறு தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றியச் செயலாளருமான ஒ. ஜோதி மீண்டும் களம் காண்கிறார். போளூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தேமுதிக சார்பில் வழக்கறிஞர் டி.பி. சரவணன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.