தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு போக்குவரத்து அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

13 May 2026, 11:48 pm
அரசு போக்குவரத்து அலுவலகம் முன்பு  மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
<p><strong>அரசு போக்குவரத்து அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்</strong></p><p>திருவண்ணாமலை, மே 13- திருவண்ணாமலை மாவட்டத்தில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளிடம் அவமரியாதை யாக நடக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அரசுப் போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் போது, அரசு வழங்கிய அடையாள அட்டையை உரிய முறையில் காண்பித்தாலும், சில ஓட்டுநர்களும் நடத்துநர்களும் அவர்களைப் பேருந்தில் ஏற்ற மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளைத் தகாத வார்த்தைகளால் பேசி அவமதிப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய அடாவடிச் செயல்களில் ஈடுபடும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்து நர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் புதன்கிழமையன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி. ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்தத் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அரசுப் போக்குவரத்துக்கழக திருவண்ணா மலை மண்டல மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அரசு விதிகளை மீறி மாற்றுத்திறனாளிகளிடம் முறைதவறிச் செயல்படும் பணியாளர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் சிவாஜி, பொருளாளர் சத்யா, மாநிலப் பொருளாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.