இரு பேருந்து நிலையங்கள் செயல்பட வேண்டும் ஆட்சியரிடம் சிபிஎம் மனு
5 hours before
<p>திருவண்ணாமலை, ஜூலை 13- திருவண்ணாமலை மாநகரத்தில் பழைய பேருந்து நிலை யத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகளை, புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றியதால் பயணி களுக்கும், உள்ளூர் மக்க ளுக்கும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வழித்தடங் கள் முறையாகத் திட்ட மிடப்படாததால் பயண நேரம் அதிகரித்துள்ளதுடன், புதிய பேருந்து நிலை யத்தில் போதிய வசதி களும் இல்லை. இந்த இடமாற்றத்தால் பழைய பேருந்து நிலையத்தைச் சார்ந்திருக்கும் 400-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழி லாளர்களும், 1000-க்கும் மேற்பட்ட சிறு வணிகர்களும் வாழ்வாதா ரத்தை இழந்துள்ளனர். ஆரணி, வந்தவாசி நகராட்சிகளைப் போல திருவண்ணாமலையிலும் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் என இரண்டு நிலையங்களும் இயங்க வேண்டும். பழைய பேருந்து நிலை யத்திலிருந்து முன்பு இயக்கப்பட்ட வழித் தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சிபி எம் மாவட்ட ஆட்சியரி டம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. இந்த நிகழ்வில் மாநில குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மாவட்ட செயலாளர் ப.செல்வன், செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், மாவட்ட குழு உறுப்பினர் ச.குமரன் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகி பெரியசாமி ஆகி யோர் கலந்து கொண்டனர்.</p>
