திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்''
17 Jun 2026, 12:13 am
<p><strong>திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்''</strong></p><p>: பரபரப்பு திருவண்ணாமலை,ஜூன் 16- திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்திற்கு, இன்று காலை மின்னஞ்சல் மூலம் மிரட்டல் செய்தி ஒன்று வந்தது. அதில், நீதிமன்ற வளா கத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது நண்பகல் நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் 'தென்றல்' உதவி யுடன் நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதனை யில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு வெடி குண்டு ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இது ஒரு வதந்தி எனத் தெரியவந்தது. கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மிரட்டலைப் போலவே, இதுவும் வெறும் மிரட்டல் என்பது உறுதி செய்யப்பட்டு ள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் கண்டறிய சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிரட்டலால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>
