தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

10 நாட்களாகக் குடிநீர் இல்லை திருவண்ணாமலை மாநகராட்சி மக்கள் மறியல் போராட்டம்

21 Feb 2026, 4:39 pm
10 நாட்களாகக் குடிநீர் இல்லை திருவண்ணாமலை மாநகராட்சி மக்கள் மறியல் போராட்டம்
<p><strong>10 நாட்களாகக் குடிநீர் இல்லை திருவண்ணாமலை மாநகராட்சி மக்கள் மறியல் போராட்டம்</strong></p> <p>திருவண்ணாமலை,பிப்.20- திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட ஆடையூர் பகுதியில் கடந்த 10 நாட்களாகக் குடிநீர் விநியோகிக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். ஆடையூர் பகுதியி லிருந்து கிரிவலப் பாதை யில் உள்ள கழிவறை களுக்குத் தண்ணீர் சப்ளை செய்கிறார்கள், ஆனால் அதே ஆடையூரில் வசிக்கும் தங்களுக்குக் குடிநீர் கூட வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்தனர். கடந்த சில நாட்களாகத் தற்காலிகமாக டேங்கர் லாரியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாகவும், அப்படி விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் சுகாதாரமின்றி இருந்த தாகவும், அதனால் மக்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் தெரிவித்த அவர்கள், உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்க வேண்டும் எனக்கோரிக்கையை வலியுறுத்தித் திருவண்ணா மலை - காஞ்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த திருவண்ணா மலை கிராமிய காவல் நிலைய போலீசார் போரா ட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எஸ்.ராமதாஸ், சிபிஎம் மூத்த உறுப்பினர் புணல் காடு செல்வம் ஆகியோர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று, குடிநீர் இல்லாமல் தவித்து வரும் ஆடையூர் பகுதி மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல்துறையினரிடம் வலியுறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.