முந்தய பக்கம்

கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

21 Jul 2026, 12:01 am
கூட்டுறவு சங்கப் பணியாளர்கள்  ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
<p><strong>கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருவண்ணாமலை, ஜூலை 20– நியாய விலை கடைகள் மூலம் செயல்படுத்தப்படும் ‘தாயுமானவர்’ திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; ஏப்ரல் 2023-க்குப் பிறகு ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்குப் புதிய ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2023 ஏப்ரல் முதல் அனுமதிக்கப்பட்ட புதிய ஊதியத்தில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளால், பணியாளர்கள் இன்று வரை நிலுவைத் தொகையைப் பெற முடியாத நிலை நீடிப்பதைச் சுட்டிக்காட்டி, உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram