கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, சிறுகதை போட்டிகள் தமுஎகச அறிவிப்பு
24 Sept 2026, 2:13 am

கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, சிறுகதை போட்டிகள் தமுஎகச அறிவிப்பு

திருவண்ணாமலை, செப்.23-திருவண்ணாமலை மாவட்டத்தில் பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திரு வண்ணாமலை மாவட்டக்குழு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை மற்றும் சிறுகதைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இதுகுறித்து தமுஎகச வெளியிட்டுள்ள அறிவிப்பு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். கையெழுத்துப் பிரதியாகவோ, கணினியில் அச்சிடப்பட்ட பிரதியாகவோ படைப்புகளை சமர்ப்பிக்கலாம். ஒருவரே இரண்டு போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம். படைப்புகளில் பங்கேற்பாளரின் பெயர், முகவரி ஆகியவை குறிப்பிடக்கூடாது. தனித்தாளில் பெயர், முகவரி மற்றும்தொடர்பு விவரங்களை இணைக்க வேண்டும்.வெற்றி பெறும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நிகழ்வில் பரிசுகள்வழங்கப்படும்.

முதல் பரிசு ரூ.3,000, இரண்டாம் பரிசு ரூ.2,000, மூன்றாம் பரிசு ரூ.1,000.போட்டிக்கான படைப்புகள் 30.09.2026-க்குள் வந்து சேர வேண்டும். அதன் பின்னர் பெறப்படும் படைப்புகள்ஏற்றுக்கொள்ளப்படாது என தெரி விக்கப்பட்டுள்ளது.படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:கவிஞர் நா. முத்துவேலன், 401-C, நாகப்பன் இல்லம், மேற்கு இராஜ வீதி, நெடுங்குணம் & அஞ்சல் சேதுப்பட்டவீடு,திருவண்ணாமலை மாவட்டம் – 606807.மேலும் விவரங்களுக்கு நா. முத்து வேலன் – 9042569083, உ.கிருஷ்ணமூர்த்தி – 8925402754, மா.பத்மராஜகலைஞன் –9443591262 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.