டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்
8 Jul 2026, 10:53 pm
<p><strong>டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்</strong></p><p>திருவண்ணாமலை, ஜூலை 8- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்திற்கு உட்பட்ட மேல்பென்னாத்தூரில், வேளாண்மைத் துறையின் சார்பில் ‘டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பளவைக் கணக்கிடும் இப்பணியினை, புதன்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்தத் திட்டத்தின் மூலம் விவசாய நிலங்களின் சாகுபடி விவரங்களை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துல்லியமாகப் பதிவு செய்வது குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், இப்பணியை விரைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மேற்கொள்ளுமாறு வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு அவர் அறி வுறுத்தினார்</p>
