மாணவிகள், பொதுமக்களுக்கு இடையூறு டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்
10 Oct 2026, 2:08 am

மாணவிகள், பொதுமக்களுக்கு இடையூறு டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்

திருவண்ணாமலை, அக். 9-திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதுப்பட்டு சாலையில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மது பானக் கடையை அகற்ற வேண்டும் என புதுப்பட்டு, ஆலப்புத்தூர், கனிகாரன் கொல்லை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதியைச் சுற்றி ஏராளமான குடியிருப்பு கள் உள்ளன. மேலும், கிராமப்புறங்களில் இருந்து அரசு பள்ளிக்குச் செல்லும் மாணவி

கள், தினமும் இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ள சாலை வழியாக சைக்கிளில் சென்று மாலை வீடு திரும்புகின்றனர். இதனால் மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் அச்சத்துடனும், மன உளைச்சலு டனும் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரி விக்கின்றனர்.

மேலும், டாஸ்மாக் கடைக்கு அருகி லேயே தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் இந்த டாஸ்மாக் கடை அச்சுறுத்தலாகவே உள்ளது.

குறிப்பாக மதுபானம் அருந்திவிட்டு சிலர் சாலையோரங்களில் நின்று கொண்டு

பொதுமக்களுக்கும், பெண்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்து கின்றனர். இதனால் அப்பகுதியில் பாது காப்பற்ற சூழல் நிலவுகிறது. மேலும், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், புதுப்பட்டு சாலை யில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.