இரண்டு பேருந்து நிலையங்கள் செயல்பட வேண்டும் ஆட்சியரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மனு
11 Jul 2026, 10:28 pm
<p><strong>இரண்டு பேருந்து நிலையங்கள் செயல்பட வேண்டும் ஆட்சியரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மனு</strong></p><p>திருவண்ணாமலை, ஜூலை 11- திருவண்ணாமலை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்களின் வசதிக்காகவும் பழைய பேருந்து நிலையத்தைத் தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திருவண்ணாமலை மாநகரத்திலிருந்து 9 முக்கிய சாலைகள் பல்வேறு ஊர்களை இணைக்கும் வகையில் செல்கின்றன. இப்பகுதியின் போக்குவரத்துச் சூழல் மற்றும் மக்களின் பயணத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பல நகரங்களில் தற்போது 2 பேருந்து நிலையங்கள் செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். ஒரே பேருந்து நிலையம் மட்டும் இருந்தால் பொது மக்களுக்கும், வணிகர்களுக்கும், போக்குவரத்துச் சேவை யில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படும். எனவே, திருவண்ணாமலையில் பழைய பேருந்து நிலையத்தையும் தொடர்ந்து செயல்பட அனு மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு நிர்வாகி கே.நாகராஜன் மற்றும் ஆட்டோ சங்கச் செயலாளர் இரா.சரவணன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.</p>
