முந்தய பக்கம்

பழைய பேருந்து நிலையத்தை மீண்டும் செயல்படுத்த ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை

14 Jul 2026, 1:18 am
பழைய பேருந்து நிலையத்தை மீண்டும் செயல்படுத்த ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை
<p><strong>பழைய பேருந்து நிலையத்தை மீண்டும் செயல்படுத்த ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை</strong></p><p>திருவண்ணாமலை, ஜூலை 13- திருவண்ணாமலையில் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்துகள் அனைத்தும் திங்கள்கிழமை முதல் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டன. இதனால் பழைய பேருந்து நிலையத்தில் தொழில் செய்து வந்த ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, பழைய பேருந்து நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சரவணன் தலைமையில், ஓட்டுநர்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram