சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் கோரிக்கை!
5 Jun 2026, 3:09 am

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் கோரிக்கை!

திருவண்ணாமலை, ஜூன் 4- திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்மைக்காலமாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடு மைகள், பாலியல் அத்துமீறல்கள், மிரட்டல்கள் மற்றும் சமூக விரோதச் செயல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் கவலை யையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் விரை வாகவும் கடுமையான முறையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.

குணா மற்றும் மாவட்ட பொருளாளர் பி. கௌரி ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்து நடந்துள்ள பல்வேறு குற்றச்சம்பவங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

செங்கம் பகுதியில் 14 வயது சிறுமியை ஒருவன் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியதோடு மட்டுமன்றி, அதனை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து மிரட்டியுள்ளான்.

மேலும், தனது நண்பனுடன் இணைந்தும் அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளான்.

சிறுமியின் தனியுரிமையை மீறும் வகை யில் அந்த ஆபாசப் படங்களைச் சமூக வலைத்தளங்களில் பரப்பியிருப்பது மிகவும் கொடூரமான குற்றமாகும். அ

தேபோல, ஆரணி அருகே மற்றொரு 14 வயது சிறுமியை நீண்டகாலமாகப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்து, மிரட்டிப் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர், அச்சிறுமியின் வீட்டிற்குள்ளேயே அத்துமீறி நுழைந்து மீண்டும் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான்.

இச்சம்பவங்கள் அனைத்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு இங்கு எந்த அளவிற்குப் கேள்விக்குறியாகியுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன.

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீதும், சிறுமியின் ஆபாச வீடியோக்களைப் பரப்பியவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கம் கோரி யுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கும் அவர்களது குடும்பத்தி னருக்கும் உரிய பாதுகாப்பு, அரசு நிவாரண உதவிகள் மற்றும் உளவியல் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் பாது காப்பிற்காகச் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மாவட்ட அளவில் விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் முதன்மைக் கடமை என்பதால், இத்தகைய குற்றங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உறுதி யான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.