தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த திருவண்ணாமலை விதொச கோரிக்கை

9 Oct 2026, 12:33 am
பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு  100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த  திருவண்ணாமலை விதொச  கோரிக்கை

பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த திருவண்ணாமலை விதொச கோரிக்கை

திருவண்ணாமலை, அக். 8 –அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட 7ஆவது மாநாடு காஞ்சி கூட்டு சாலையில் மாவட்டத் தலைவர் பி. கணபதி தலைமையில் நடைபெற்றது.

வரவேற்புக்குழு தலைவர் கே. நவாப் ஜான் வரவேற்க, மாநில செயலாளர் எஸ். பிரகாஷ் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே.கே. வெங்கடேசன் வேலை அறிக்கையை வாசித்தார். சிஐடியு கமலக்கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஏ. லட்சுமணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொதுச் செயலாளர் வி. அமிர்தலிங்கம் நிறைவுரையாற்றினார். மாநாட்டையொட்டி காஞ்சி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஊர்வலத்தை முன்னாள் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார் துவக்கி வைத்தார்.

மாநாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும், 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், கோயில் நிலங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் தேர்வு

மாவட்ட தலைவராக கே.கே. வெங்கடேசன், செயலாளராக ச. குமரன், பொருளாளராக எஸ். தங்கமணி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிறைவாக வி. மஸ்தான் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.