முந்தய பக்கம்

 திருவண்ணாமலை - வேலூர் சாலை கோட்டாம்பாளையம்

10 Feb 2026, 4:50 pm
  திருவண்ணாமலை - வேலூர் சாலை கோட்டாம்பாளையம்
<p><strong>குடியிருப்பில் டாஸ்மாக் கடை: தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை</strong></p> <p>திருவண்ணாமலை, பிப். 10- &nbsp;திருவண்ணாமலை - வேலூர் சாலை கோட்டாம்பாளையம், அன்னக்கிளி கொட்டாய் குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். சுண்ணாம்பு சூளை அருகே மதுபானக் கடை திறந்தால் மாணவர்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் என்றும், விளைநிலங்கள் மற்றும் கால்நடை மேய்ச்சல் பாதிக்கப்படும் என்றும் மக்கள் தெரிவித்தனர். முன்னதாகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடை அருகே இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்தனர். இதில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சி.எம். பிரகாஷ், தாலுகா செயலாளர் அபிமாறன், மாதர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுணா, நிர்வாகிகள் கௌரி, முனியம்மாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ். ராமதாஸ், எம். பிரகலாதன், மாவட்டக் குழு உறுப்பினர் ச. குமரன், ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், கிளைச் செயலாளர் எஸ். ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram